அனிருத்துக்கு 34 வயதுதான் ஆகுது.. இத்தனை கோடிக்கு அதிபதியா?.. அசரவைக்கும் சொத்து மதிப்பு
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இப்போது அவர்தான் முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கடைசியாக அவரது இசையமைப்பில் வேட்டையன், இந்தியன் 2, தேவரா உள்ளிட்ட ஏராளமான படங்கள் வெளியாகின. அடுத்ததாக கூலி, விடாமுயற்சி, தளபதி 69 உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இந்நிலையில் இன்று அவர் தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடிவரும் சூழலில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
ரஜினியின் உறவினரான அனிருத் தனுஷ் நடிப்பில் உருவான 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஐஸ்வர்யா இயக்கியிருந்த அந்தப் படம் வசூல் ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது.முக்கியமாக அனிருத்தின் இசை மெகா ஹிட்டடித்தது. ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி முதல் படமான ரோஜாவில் சென்சேஷன் ஆனாரோ அதேபொல் 3 படத்திலும் ரீ ரெக்கார்டிங், பாடல்கள் என அனைத்திலுமே தனது தனித்த முத்திரையை பதித்தார்.

ஒய் திஸ் கொலவெறி: 3 படத்தின் ஆல்பத்தில் எல்லா பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தாலும்; ஒய் திஸ் கொலவெறி பாடல் மெகா ஹிட்டானது. இதன் காரணமாக ஒரே நைட்டில் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கையும் அனிருத் சந்திக்கும் வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது. அந்தப் பாடலின் வெற்றிக்கு பிறகு அனிருத்தை தெரியாதவர்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
குவிந்த வாய்ப்புகள்: முதல் பட பாடல்களின் வெற்றிக்கு பிறகு எங்கும் அனிருத் மயமாகத்தான் இருந்தது. இளம் ஹீரோக்கள் முதல் வளர்ந்த ஹீரோக்கள்வரை அனிருத்திடம் சென்றனர். முக்கியமாக தளபதி விஜய் படம் என்றாலே அனிருத்தான் என்று ஃபிக்ஸ் செய்யப்பட்டது. கடைசியாக வெளியான விஜய் படங்களில் வாரிசு, GOAT படம் தவிர்த்து மற்ற எல்லா படங்களுக்குமே அனிருத்தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இசையமைக்கும் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கின்றன.
10 கோடி ரூபாய் சம்பளம்: விஜய் எப்படியோ அப்படியே ரஜினியும். அவரும் தனது படங்களுக்கு அனிருத் இசையமைப்பதையே விரும்புகிறார். அனிருத்தும் அதற்கேற்றபடி ரஜினிக்கென்றால் ஸ்பெஷலாக இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான வேட்டையன் திரைப்படத்தில்கூட அனிருத்தின் இசை தனித்து தெரிந்தது. அனைவருமே அனிருத்தின் இசையை தூக்கி வைத்து கொண்டாடிவருகிறார்கள். தமிழில் மட்டும் தடம் பதித்துவந்த அனிருத் ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் பிஸியாக ஆரம்பித்திருக்கிறார். ஒரு படத்துக்கு பத்து கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
சொத்து மதிப்பு: இந்நிலையில் அனிருத் இன்று தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்துவரும் சூழலில் அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி மொத்தம் அவருக்கு 70 கோடி ரூபாய்வரை சொத்து இருக்கிறதாம். ஒரு படத்துக்கு பத்து கோடி ரூபாய்வரை சம்பளமாக பெறும் அவரிடம் BMW, PORSCHE உள்ளிட்ட சொகுசு கார்களும் இருக்கின்றன. அதுமட்டுமின்றி ஹோட்டல் தொழிலை செய்துவரும் அவருக்கு அதன் மூலமும் வருமானம் கொட்டுவதாகவும்; கான்செர்ட் மூலமும் நல்ல பணம் கிடைப்பதாகவும் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.


Click it and Unblock the Notifications











