அனிருத் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்: பிறந்தநாள் ஸ்பெஷல்

Recommended Video

அனிருத் பிறந்தநாள் கொண்டாட்டம் வீடியோ

சென்னை: இசையமைப்பாளர் அனிருத் இன்று தனது 28 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

குத்தாட்டம் போடும் கொண்டாட்ட பாடலாக இருக்கட்டும், உடைந்து போன மனதிற்கு ஒத்தனம் கொடுக்கும் சோகமாக இருக்கட்டும், கட்டிப்போடும் காதல் பாடலாகட்டும், இன்றைய இளைஞர்களின் இதயத் துடிப்பை நாடி பிடித்து பாடல் கொடுக்கும் நல்ல பிள்ளை இசையமைப்பாளர் அனிருத்.

Music director Anirudh birthday!

3 படத்தின் "கொலவெறி" பாடலிலேயே கொலவெறி ஹிட் அடித்து திரும்பிப் பார்க்க வைத்தார்.

எல்லா படங்களுமே ஹிட்டடித்தாலும், நம்பிக்கை மிகுந்த இசையமைப்பாளராக மாறிவிட்டாலும், இசையில் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என இப்போது ம்யூஸிக் கிளாஸ் போகிறார் என சமீபத்தில் சிவகார்த்திகேயன் சொன்னார். ட்ரெண்ட் செட்டராக இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம்.

விஜய்யின் கத்தி தீம் ம்யூஸிக், அஜித் ரசிகர்களை ஆட்டம் போட வைத்த ஆலுமா டோலுமா என பெரிய நடிகர்களின் படங்களுக்குள்ள எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறார். அனிருத் மீதுள்ள அந்த நம்பிக்கை தான் அவரை "பேட்ட" படத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது.

இசையமைப்பாளர் என்றால் ஸ்டுடியோவில் இருப்பார் ட்யூன் போடுவார் என்பதை தவிர்த்து அதிகமான ஸ்டேஜ் ஷோக்களை நடத்துகிறார். தான் ரசித்த இசையை, தான் ரசித்த குரலை, கலைஞனை நேரில் சந்திக்கும் வாய்ப்பை ரசிகர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஏற்படுத்திக் கொண்டே இருப்பது, அனிருத்தின் மார்கெட் வேல்யூவை உயர்த்திக்கொள்ள உதவுகிறது. மக்களின் ரசனையை புரிந்துகொண்டு பாடல் கொடுக்க வைக்கிறது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனிருத்தை வாழ்த்தும் விதமாக உங்களுக்குப் பிடித்த அவரின் பாடல்களை பட்டியலிடுங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X