Vettaiyan Audio Launch: சாரே.. கொல மாஸ்! அனிருத்துடன் மனசிலாயோ பாடலுக்கு ஆட்டம் போட்ட சூப்பர் ஸ்டார்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழாவில், அனிருத்துடன் இணைந்து மனசிலாயோ பாடலுக்கு நடனமாடினார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

தமிழ் சினிமாவில் தற்போது அனிருத் எரா என்றே கூறவேண்டும். அந்த அளவிற்கு, டாப் கதாநாயகர்களின் படங்களுக்கு பிசியாக இசை அமைத்து வருகின்றார். தமிழ் சினிமாவைக் கடந்து, ஹிந்தி, தெலுங்கு சினிமாக்களிலும் தொடர்ந்து இசை அமைத்து வருகின்றார். இன்றைய இணைய உலகத்திற்கு ஏற்ற வகையில், அதாவது ரீல்ஸ்களில் அதிகம் இடம் பெறும் அளவிற்கு வேகமான பீட்ஸ் பாடல்களை கொடுத்து இந்த எராவை தனதாக்கி அரியாசனம் அமைத்து அமர்ந்துள்ளார்.

vettaiyan vettaiyan audio launch rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை எட்டவுள்ளார். தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக மட்டும் இல்லாமல், தொடர்ந்து மார்க்கெட் உள்ள நடிகராக இன்றைக்கும் உள்ளார். மாஸ் ஓப்பனிங், ரஜினியை நம்பி பணம் போட்டால் நிச்சயம் பைசா வசூல் என தயாரிப்பாளர்களுக்கு இன்றும் நம்பிக்கை கொடுத்துக் கொண்டு உள்ளார்.

vettaiyan vettaiyan audio launch rajinikanth

வெற்றி: இன்றைய சினிமா வசூலை வைத்துத்தான் என முடிவான பின்னர், தமிழ் சினிமாவில் தொடர்ந்து டாப் வசூல் லிஸ்ட்டில் தனது படங்களை வைத்துள்ளார். கடைசியாக இவர் கதாநாயகனாக நடித்த ஜெய்லர் படம் கிட்டத்தட்ட 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. வேட்டையன் படத்தில் இருந்து முதலில் வெளியிடப்பட்ட மனசிலாயோ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் மனசிலாயோ பாடல் பாடப்பட்டது.

மனசிலாயோ: அப்போது மேடையில் இருந்து இறங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்த அனிருத் அவரை, தன்னுடன் நடனமாடும்படி கேட்டுக் கொண்டார். முதலில் மறுப்பு தெரிவித்த சூப்பர் ஸ்டார் அதன் பின்னர் அனிருத்துடன் இணைந்து நடனமாடினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. ஏற்கனவே இந்த பாடலுக்கு கூலி படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினருடன் நடனமாடினார். இந்த நிகழ்வு ஓணம் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X