Mohanlal: முத்துவேலை காப்பாற்ற வரும் மேத்யூ.. மோகன்லாலுக்காக தீம் மியூசிக் போட்ட அனிருத்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ரஜிகாந்திற்கு ஜோடியாகியுள்ளார் ரம்யா கிருஷ்ணன். தமன்னாவும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.

இன்னும் சில தினங்களில் ஜெயிலர் படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் படத்தில் மோகன்லால் கேரக்டர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

Music director Anirudh made theme music for Actor Mohanlal in Jailer movie

ஜெயிலர் படத்தில் மோகன்லாலுக்கு தீம் மியூசிக்: நடிகர்கள் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் இன்னும் சில தினங்களில் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீடு, ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத்.

படத்தின் அடுத்தடுத்த காவாலா, ஹுகும், ஜூஜுபி பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்நிலையில் படத்தின் இசை வெளியீடும் கடந்த மாதம் 28ம் தேதி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டை வரும் ஞாயிற்றுக்கிழமை சன் டிவி ஒளிபரப்பவுள்ளது. இதற்கான அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

நேற்று முன்தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதில் தமன்னா, சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் ஆகியோர் இடம்பெறவில்லை. இதனால் படத்தில் இந்த கேரக்டர்களை சர்ப்பிரைசாக நெல்சன் திலீப்குமார் வைத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது லுக் போஸ்டர்களாக வெளியான நிலையில், வித்தியாசமான மோகன்லாலை காட்டியுள்ளது.

Music director Anirudh made theme music for Actor Mohanlal in Jailer movie

மோகன்லாலுக்காகவே இந்தப் படம் கேரளாவில் சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் கேரளாவில் 400 திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தில் மேத்யூ என்ற கேரக்டரில் மோகன்லால் நடித்துள்ளார். அவருக்காக இந்தப் படத்தில் அனிருத் தீம் மியூசிக்கை போட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மோகன்லாலின் காட்சிகள் இந்தப் படத்தில் மிரட்டலாக அமைந்துள்ளதாகவும் தகவல்ள் தெரிவிக்கின்றன.

ஒரு இக்கட்டான சூழ்நிலையில் டைகர் முத்துவேலை காப்பாற்றும் மேத்யூவாக மோகன்லால் படத்தில் நடித்துள்ளாராம். இதுவரை இல்லாதவகையில் மோகன்லாலை ஜெயிலர் படத்தில் நெல்சன் திலீப்குமார் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கேரளாவில் ரஜினிக்கு என்று தனியாக ரசிகர்கள் வட்டம் காணப்படுகிறது. மேலும் ஜெயிலர் படத்தில் மோகன்லால் நடித்துள்ளதாலும் படத்திற்கான எதிர்பார்ப்பு கேரள ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X