இந்தியன் 2 படம் ஓ.கே. ரகம் தான்.. அனிருத்துக்கு எல்லாமே தெரியும்.. உண்மையை உடைத்த பிரபலம்
சென்னை: 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகர்களில் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் சூப்பர் ஸ்டார் ரஜினி தொடங்கி தனுஷ் வரை அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் ரிலீஸ் ஆக அடுத்தடுதடுத்து தயாராக உள்ளது. இதில் முதல் ரிலீஸ் ஆன படம் இந்தியன் 2. உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2 இன்று அதாவது ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது.
படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆனதில் இருந்தே படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. கமல் ஹாசன் உட்பட படக்குழு நாடு நாடாகச் சென்று படத்திற்கு புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் படம் இன்று ரிலீஸ் ஆனது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டு இருப்பதால் படக்குழு கொஞ்சம் அப்செட் ஆகியுள்ளது என்றே கூறலாம்.

மேலும் இந்தியன் 2 படத்தில் கமல் மட்டும் இல்லாமல் அதிகப்படியான நட்சத்திர பட்டாளங்களும் நடித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இந்தியன் 2 படம் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் நீட்சியாக எடுக்கப்பட்டது. மேலும் இந்தியன் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்திருந்தார். ஆனால் இந்தியன் 2 படத்திற்கு இசை அனிருத் என அறிவிக்கப்பட்டதுமே ரசிகர்களுக்கு ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தது. மேலும் இந்தியன் படத்தின் பாடல்கள் தொடங்கி பின்னணி இசை வரை அனைத்துமே ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

அனிருத்: இப்படியான நிலையில் இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் ரிலீஸ் ஆனது. தீரா என்ற பெயரில் ரிலீஸ் ஆன முதல் பாடல் பெரும்பான்மையான ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. அதன் பின்னர் ரிலீஸ் ஆன கதறல் பாடல் குழந்தைகள் வரை கவர் செய்தது. படத்தின் இசை வெளியீட்டு விழாவும் ரசிகர்கள் சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. வழக்கமாக ஒரு படத்தின் ரிலீஸ்க்கு முன்னர் அனிருத் அந்த படம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இப்படியான நிலையில் அனிருத் லியோ, ஜெய்லர் மற்றும் ஜவான் படங்கள் எப்படி உள்ளது என பதிவிட்டு வந்தார். இப்படியான நிலையில் இந்தியன் 2 படம் குறித்து அனிருத் எதுவுமே பதிவிடாதது குறித்து தற்போது கேள்விகள் எழுந்துள்ளது.

ப்ளூ சட்டை மாறன்: இந்நிலையில் படம் இன்று அதாவது ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. இந்நிலையில், அனிருத் படம் சுமார் தான் என ஏற்கனவே ரசிகர்களுக்கு சொல்லாமல் சொல்லிவிட்டார் என இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றது. இதனை பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் ரீ ட்வீட் செய்து, இந்தியன் 2 படத்தில் இருக்கும் தலைவரின் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்) ஸ்லீப்பர் செல் என கமெண்ட் செய்துள்ளார். இதற்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











