Anirudh: யார் கண்ணுக்கும் தெரியாத வரம்.. அனிருத்திற்கு இப்படி ஒரு ஆசையா?

சென்னை: குத்து பாடல்கள் முதல் மெலடி பாடல்கள் வரை இன்றைய இளம் தலைமுறையினர் கொண்டாடும் இசை நாயகனாக வலம் வருபவர் அனிருத். அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படத்திற்கு இசை அமைத்து வரும் இவர், தனக்கு இருக்கும் வித்தியாசமான ஆசை பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத், இசையின் மீது இருந்த ஆர்வத்தால், சவுண்ட் இன்ஜினியரிங் மற்றும் கர்நாடக இசையை முறைப்படி கற்றுத் தேர்ந்தார். அவரது திறமையை கண்டறிந்த தனுஷ். '3' படத்தில் அவருக்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்தார். முதல் படத்திலேயே 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் படக்குழுவே எதிர்பார்க்காத அளவிற்கு உலக அளவில் ஹிட்டானது. முதல் படத்தை தொடர்ந்து டேவிட், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை என வரிசையாக பல்வேறு ஹிட் பாடல்களை கொடுத்தார். வேலையில்லா பட்டதாரி, கத்தி ஆகிய படங்கள் அனிருத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றன.

Anirudh Ravichander Music director
Photo Credit:

இசையமைப்பாளர் அனிருத்: தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருக்கும் அனிரும், ரஜினி, விஜய், கமல், அஜித், சூர்யா என ஸ்டார் நடிகர்களின் படத்திற்கு இசை அமைத்து வருகிறார். சூப்பர் ஸ்டார் நடித்த ஜெயிலர் படத்தில் வரும்... சூப்பர் ஸ்டாரு பாடலை ரஜினி ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதைத்தொடர்ந்து வேட்டையன், கூலி, ஜெயிலர் 2 என அடுத்தடுத்து ரஜினியின் படத்திற்கு இசையமைத்து வருகிறார். கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ந் தேதி வெளியாக உள்ளது. இதுமட்டுமில்லாமல் ஷாருக்கான் நடித்த ஜவான், தேவரா என பல படங்களுக்கு இசையமைத்து இன்று தேசிய அளவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத்.

வித்தியாசமான ஆசை: சினிமாவிற்கு வந்த சில வருடங்களிலேயே பெரும் சாதனைகளை படைத்து உச்சத்தில் இருக்கும் அனிருத், தனது ஆசை குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில், நான் யார் கண்ணுக்கும் தெரியாமல் போகும் வரம் கிடைத்தால், முதலில், பேருந்தில் பயணம் செய்வேன். பள்ளி நாட்களில் எப்படி பேருந்தின் இருக்கையில் அமர்ந்து கொண்டு பயணம் செய்தேனோ அப்படி பயணம் செய்வேன். இதை இப்போது செய்ய முடியாததால், ரொம்ப மிஸ் செய்கிறேன். வெளிநாட்டுக்கு சென்றால் என்னால் பேருந்தில் பயணம் செய்ய முடிகிறது. ஆனால், என்னோட நாட்டில், நான் எப்போதும் கடந்து வந்த பாதையில் அப்படி பயணம் செய்வதை பெரிதும் விரும்புகிறேன் என தனது வித்தியாசமான ஆசை பற்றி கூறி இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள், நல்ல ஆசைத்தான், யாருக்குத் தான் பேருந்து பயணம் பிடிக்காது என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X