Maha Shivratri 2025: மகா சிவராத்திரி.. திருவண்ணாமலையில் தரிசனம் செய்யும் அனிருத்.. பக்தி மயம்!
திருவண்ணாமலை: மகா சிவராத்திரி வந்து விட்டால் சிவ பக்தர்கள் எங்கிருந்தாலும், தங்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமான சிவாலயத்துக்குச் சென்று வழிபட தவறுவதில்லை. இதனை உலகம் முழுவதும் உள்ள சிவ பக்தர்கள் பின் பற்றி வருகிறார்கள். இன்றைய தினத்தில் எந்த சிவாலயத்துக்குச் சென்றாலும் பக்தர்கள் வெள்ளம் போல திரண்டு இருப்பார்கள். அந்த வகையில் இசையமைப்பாளர் அனிருத் திருவண்ணாமலைக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.
அனிருத் தற்போது தென்னிந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் இசையமைப்பாளராக உள்ளார். இவரது இசையில் ஒரு படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. இயக்குநரின் இயக்கம் தவறலாம், நடிகர்களின் நடிப்பு கூட கொஞ்சம் அப்படி இப்படி இருக்கலாம், ஆனால் படத்தின் முதல் காட்சி தொடங்கியதில் இருந்து, கடைசி காட்சி வரை, படத்தின் உயிராக இருப்பது அனிருத்தின் பின்னணி இசைதான்.

தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் அனிருத்தின் இசை ஒரு படத்தை தனது பாடல்கள் மூலம் எளிமையாக கொண்டு சேர்த்துவிடுகிறார். தற்போது, கூலி, ஜென நாயகன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதேபோல் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திற்கு அனிருத் தான் இசை. மிகவும் பிஸியாக உள்ள அனிருத் பல பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு இசையமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ள அளவிற்கு மிகவும் பிசியாக உள்ளார்.

அனிருத்: சமீபத்தில் வெளியான அஜித்தின் விடாமுயற்சி படம் குறித்து, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், படத்தின் முதுகெழும்பாக அமைந்தது அனிருத்தின் இசை தான். இதற்கிடையில் இன்னும் பல படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சிவ பக்தரான அனிருத், மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். பக்தர்கள் வெள்ளத்திலும் பொறுமையாக வரிசையில் நின்று, வழிபாடு செய்தார். கற்ப கிரகத்திற்கு அருகில் சென்றதும் நீண்ட நேரம் கண்களை மூடி வழிபாடு நடத்தினார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சிவ மயம்: திருவண்ணாமலையில் அனிருத்தை பார்த்த ரசிகர்களும் அவரைத் தொந்தரவு செய்யாமல், மிகவும் பொறுப்பாக நடந்து கொண்டார்கள். சிலர் அவரை வீடியோ எடுப்பதும் புகைப்படம் எடுப்பதுமாக இருந்தாலும் தனக்கு வணக்கம் சொன்ன அனைவருக்கும் அனிருத் வணக்கம் சொல்லி புன்னகையும் செய்தார். அனிருத்தின் பக்தி மயம் சிவமயம் என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











