லியோ ப்ளடி ஸ்வீட்.. அனிருத் வெளியிட்ட மேக்கிங் வீடியோ

சென்னை: லியோ படத்தில் இடம்பெற்றிருக்கும் Iam Fire Proof பாடலின் மேக்கிங் வீடியோவை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

வாரிசு படத்தின் கலவையான விமர்சனங்களுக்கு பிறகு நடிகர் விஜய் மாஸ்டர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். ஏற்கனவே இவர்கள் விஜய்யும், லோகேஷும் இணைந்த மாஸ்டர் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானதால் இந்தப் படம் மீது ரசிகர்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ் மீது பெரிய எதிர்பார்ப்பு

லோகேஷ் கனகராஜ் மீது பெரிய எதிர்பார்ப்பு

இருவரும் இணையும் படத்துக்கு ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்புக்கு விஜய் மட்டும் காரணமல்ல. லோகேஷ் கனகராஜும் ஒரு காரணம். ஏனெனில் இதற்கு முன் அவர் இயக்கிய விக்ரம் படம் 500 கோடி ரூபாயை வசூலித்து இன்டஸ்ட்ரி ஹிட்டானது. எனவே லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தில் எந்த மாதிரியான சம்பவம் செய்யப்போகிறார் என்ற ஆவல் அனைவரிடமும் எழுந்துள்ளது.

ப்ளடி ஸ்வீட் லியோ

ப்ளடி ஸ்வீட் லியோ

விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கும் படம் கேங்ஸ்டர் படம் என்பது ஏற்கனவே பலரும் அறிந்ததுதான். இருப்பினும் லோகேஷின் கேங்ஸ்டர் பாணி நிச்சயம் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக 'லியோ ப்ளடி ஸ்வீட்' என படத்துக்கு பெயர் வைத்து அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்துவிட்டார்.

பட்டையை கிளப்பிய லியோ ப்ரோமோ

பட்டையை கிளப்பிய லியோ ப்ரோமோ

படத்தின் பெயரில் மட்டுமின்றி விக்ரம் படத்துக்கு செய்த ப்ரோமோ போல் இந்தப் படத்துக்கும் ப்ரோமோ வெளியிடப்பட்டது. ப்ரோமோவில் விஜய் சாக்லேட் பேக்டரி வைத்திருப்பது போலவும் அவரைத் தேடி காஷ்மீருக்கு ஒரு கேங் வருவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தக் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

இப்படி காட்சிகள் மட்டுமின்றி ப்ரோமோவில் ஒலித்த 'iam fire proof'என்ற பாடலும், அதில் இடம்பெற்ற வரிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. எனவே லியோ படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் தரமான செய்கை செய்யப்போகிறார் என ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டனர்.

அனிருத் வெளியிட்ட மேக்கிங் வீடியோ

அனிருத் வெளியிட்ட மேக்கிங் வீடியோ

இந்நிலையில் லியோ படத்தின் ப்ரோமோவில் இடம்பெற்ற iam fire proof பாடலின் மேக்கிங் வீடியோவை அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அனிருத், பாடலை பாடிய சித்தார்த் பஸ்ரூர் உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கின்றனர். வீடியோவை பார்த்த ரசிகர்கள் மேக்கிங் வீடியோவே இப்படி தீ மாதிரி இருக்கிறதே அப்போ படத்தில் லோகேஷ் இதை வேற லெவலில் காட்சிப்படுத்தியிருப்பார் என கூறி அதிகம் ஷேர் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X