‘யார் பெற்ற மகனோ‘.. ரசிகர்களை அழ வைத்த அனிருத்.. இப்படி பேசுவாருனு யாரும் நினைக்கல!
மலேசியா: நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்கேற்றனர். இசை வெளியீட்டு விழாவின் நாயகனான அனிருத், விஜய் குறித்து உருக்கமாக பேசி, ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்தார்.
இசைவெளியீட்டு விழாவில் விஜய் படத்தில் இருந்து பல பாடல்களை பாடிய அனிருத், பேசிய போது, எனக்கு 21 வயது இருக்கும்போது கத்தி படத்தில் எனக்கு இசையமைக்கும் வாய்ப்பை விஜய் அண்ணா எனக்கு கொடுத்தார். இவ்ளோ பெரிய நடிகரான விஜய் என்னை நம்பி கொடுத்த போது நான் உண்மையில் உணர்ச்சிவசப்பட்டேன். ஏன் என்றால், அப்பொழுது நான் வெறும் இரண்டு திரைப்படத்திற்கு மட்டும் தான் இசையமைத்து இருந்தேன்.

அனிருத்: 2 படத்திற்கு மட்டும் இசையமைத்த என்னை, தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக இருக்கும் ஒரு நடிகர் அழைத்து எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்தார். அப்போதிலிருந்து அவருடைய பல திரைப்படங்களுக்கு நான் இசையமைத்து வருகிறேன். அதில், பல திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கின்றன. ஜனநாயகம் திரைப்படம் விஜய் அண்ணாவின் கடைசி படம் என்பதால் இந்த திரைப்படத்திற்கு எப்படி இசையமைப்பது, அது மக்களை கவர வகையில் இருக்க வேண்டும் என்ற அழுத்தம் இருந்தது.
யார் பெற்ற மகனோ: ஆனால், விஜய் அண்ணாவின் தளபதி கச்சேரியை பாடல் வெளியான போது மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்ததால் நிம்மதி அடைந்தேன். அந்த பாடலை வெற்றிப்பாடலாக்கிய உங்களுக்கு மிகவும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஜனநாயகன் படம் தான் அண்ணாவின் கடைசி படம் என நினைக்கும் போது ரொம்ப வருத்தமாக இருக்கு அண்ணா.. உண்மையில் நான் உங்களை 'மிஸ் பண்ணுவேன்' என்று சொல்லிவிட்டு கத்தி படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் உருக்கமான பாடலான 'யார் பெற்ற மகனோ' என்ற பாடலை பாடினார். அந்த பாடலை கேட்டு ஒட்டு மொத்த அரங்கமும் கலங்கி போனதை பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications











