ட்வீட் போட்டா படம் ஹிட்டாகனும்ங்கறது இப்போ பிரஷர் ஆயிடுச்சு.. என்ன அனிருத் நிலைமை இப்படி ஆயிடுச்சு?
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்த படம் பான் இந்தியா படமாக ரிலீசாகியுள்ள நிலையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இருந்தபோதிலும் கலவையான விமர்சனங்களை படம் பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தை இன்று காலை தன்னுடைய குடும்பத்தினருடன் அனிருத் கோயம்பேட்டில் உள்ள பிரபல திரையரங்கில் கண்டு களித்துள்ளார். அவருடன் தனுஷ், ரஜினிகாந்தின் குடும்பத்தினர், இயக்குனர் டிஜே ஞானவேல், நடிகை அபிராமி உள்ளிட்டவர்களும் இதே திரையரங்கம் வேட்டையன் படத்தை பார்த்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் இன்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்த படத்திற்காக மிகப்பெரிய அளவில் படக்குழுவினர் முன்னதாக பிரமோஷன்களில் ஈடுபட்டனர். லைகா நிறுவன தயாரிப்பாக உருவாக்கியுள்ள வேட்டையன் படம், ரசிகர்களை கவர்ந்துள்ள போதிலும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. முந்தைய படமான ஜெய் பீம் படத்தில் பெற்ற சிறப்பான வரவேற்பை இந்தப் படத்தில் இயக்குநர் டிஜே ஞானவேல் பெற தவறி விட்டதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தை தேவி திரையரங்கில் சென்று நடிகர் விஜய் பார்த்துள்ளார்.
வேட்டையன் படம் ரிலீஸ்: இதே போல படக்குழுவினரும் ரஜினிகாந்தின் குடும்பத்தினரும் கோயம்பேட்டில் உள்ள பிரபல திரையரங்கில் வேட்டையன் படத்தை பார்த்துள்ளனர். இந்த விசிட்டின்போது பேசிய லதா ரஜினிகாந்த் ரஜினிகாந்தின் உடல்நிலை சிறப்பாக இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனிடையே இதே திரையரங்கில் தன்னுடைய பெற்றோருடன் வேட்டையன் படத்தை பார்க்க வந்த இசையமைட்பபாளர் அனிருத், படம் குறித்து தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். ஜெயிலர் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் அனிருத் இணைந்துள்ள நிலையில், ரசிகர்கள் மிகவும் என்ஜாய் செய்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
அனிருத் பேட்டி: முன்னதாக இந்த படத்திற்காக குறி வச்சா இரை விழும் என்ற டயலாக்கை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார் அனிருத். இந்நிலையில் இதுகுறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் பேசிய அனிருத், தான் அதுபோல பதிவு போட்டால் படம் வெற்றி பெற வேண்டும் என்ற பிரஷர் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். முன்னதாக ஜெயிலர் படத்திற்கும் அவர் இதே போன்ற கமெண்டை பதிவு செய்திருந்தார். முன்னதாக லியோ படத்திற்கும் அவரது கமெண்ட் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வேட்டையன் படத்திற்கும் அதேபோன்றதொரு கமெண்டை அவர் பதிவு செய்திருந்தார்.
அனிருத்தின் பிரஷர்: இந்நிலையில் அதுவே தனக்கு படத்தின் வெற்றிக்கான பிரஷரை ஏற்படுத்துவதாக அவர் தற்போது கூறியுள்ளார். அவரது இந்த கமெண்ட் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல், நடிகை அபிராமி உள்ளிட்டவர்களும் திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து படத்தை பார்த்துள்ளனர். தன்னுடைய படங்களையே ரசிகர்களுடன் சென்று பார்ப்பதை தவிர்த்து வரும் நடிகர் விஜய், இந்த படத்தை ரசிகர்களுடன் இணைந்து தேவி திரையரங்கில் சென்று பார்த்தது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இன்னும் சில தினங்களில் அவரது கட்சி மாநாடு நடக்க உள்ள நிலையில் ரசிகர்களை கவரும் வகையில் விஜய் வேட்டையன் படத்தை பார்த்தாரா என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் பலரும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











