அஜித்தின் விடாமுயற்சி படத்தை தியேட்டரில் பார்த்து வைப் செய்த அனிருத்.. ரசிகர்களுடன் கொண்டாட்டம்!
சென்னை: நடிகர் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து இன்றைய தினம் கொண்டாட்டத்துடன் ரிலீசாகியுள்ளது விடாமுயற்சி படம். 2 ஆண்டுகளாக அஜித் பட ரிலீசுக்காக காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை இந்தப் படம் கொடுத்துள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துவரும் நிலையிலும் ரசிகர்களின் கொண்டாட்டத்தை நிறுத்த முடியவில்லை.
தற்போது தன்னுடைய கார் ரேஸிங்கிற்காக துபாயில் உள்ளார் அஜித்குமார். இதனிடையே இன்றைய தினம் ரிலீசாகியுள்ள விடாமுயற்சி படத்தை திரிஷா, ஆரவ் உள்ளிட்ட படத்தின் நடிகர், நடிகைகள் மட்டுமில்லாமல் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தும் திரையரங்குகளில் சென்று ரசிகர்களுடன் படத்தை கண்டு களித்துள்ளார்.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்குமாரின் துணிவு படத்தை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ரசிகர்களின் காத்திருப்பிற்கு பிறகு தற்போது விடாமுயற்சி படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. லைகா நிறுவன தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாகியுள்ளார் திரிஷா. இவர்களின் காம்பினேஷன் படத்திற்கு சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. ரோட் டிராவலை மையமாக கொண்டு வெளியாகியுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தில் அஜித்துடன் அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். மகிழ் திருமேனி இயக்கத்தில் படம் வெளியாகியுள்ளது.
விடாமுயற்சி படம்: இந்தப்படத்தில் தமிழகத்தில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. மற்ற மாநிலங்களில் 6.30 மணி காட்சிகள் வெளியாகின. படத்தை பார்ப்பதற்கு காத்திருக்க முடியாத ரசிகர்கள் அண்டை மாநிலங்களில் சென்று படத்தை பார்த்த சம்பவங்களும் நடந்துள்ளன. காலையிலேயே படத்தை பார்த்துவிட்டு சமூக வலைதளங்களில் சிறப்பான விமர்சனங்களை ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர். படம் சராசரியாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள போதிலும் அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்திலிருந்து தடுத்து நிறுத்த முடியவில்லை. ரசிகர் ஒருவர் அஜித்தின் லுக்கிலேயே படத்தை பார்க்க திரையரங்கிற்கு வந்ததையும் பார்க்க முடிந்தது.

திரையரங்கில் சென்று படம்பார்த்த அனிருத்: முன்னதாக திரிஷா வெற்றி திரையரங்கில் விடாமுயற்சி படத்தை பார்க்க வந்த நிலையில், அஜித் -திரிஷா காம்பினேஷனில் உருவாகியுள்ள படத்தின் சவேரிக்கா பாடலின்போது ரசிகர்கள் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதை பார்த்த திரிஷா, அந்தக் கொண்டாட்டங்களை வீடியோவாக தன்னுடைய செல்போனில் பதிவிட்டதை பார்க்க முடிந்தது. அவருடன் ரெஜினாவும் படத்தை ரகர்களுடன் இணைந்து பார்க்க வந்திருந்தார். இதனிடையே படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தும் வெற்றி திரையரங்கில் விடாமுயற்சி படத்தை பார்க்க வந்திருந்தார்.
ரசிகர்களுடன் கொண்டாட்டம்: தன்னுடைய காரிலிருந்து கீழே இறங்கிய அனிருத், அருகிலிருந்த திரையரங்க நிர்வாகிகளிடம் சில விஷயங்களை கேட்டு தெரிந்துக் கொண்டார். தொடர்ந்து மேலே படத்தை பார்க்க சென்ற அவருக்கு ரசிகர்கள் கீழிருந்தபடி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து அவர்களுக்கு கைக்கூப்பி வணக்கம் தெரிவித்த அனிருத், அவர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்து தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார். நடிகர்கள் அர்ஜுன் தாஸ் மற்றும் ஆரவ் ஆகியோரும் திரையரங்குகளில் சென்று ரசிகர்களுடன் உற்சாகமாக படத்தை பார்த்தனர். மேலும் அவர்களுடன் இணைந்து செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர்.



Click it and Unblock the Notifications











