ஃப்ரண்டா பழகிட்டு அது மாதிரி செஞ்சா கஷ்டமா இருக்கும்.. பேட்டியில் மனம் நொந்த ஏ.ஆர்.ரஹ்மான் மகள்!

சென்னை: தமிழ் சினிமாவின் அடையாளமாக மட்டும் இல்லாமல், இந்திய சினிமாவின் அடையாளமாக உயர்ந்து நிற்பவர் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான். இவரது இசையை விரும்பாத, இவரது இசைக்கு உருகாத மனங்களே இல்லை எனச் சொல்லும் அளவிற்கு தனது இசையால் பல கோடிக்கணக்கான மக்களை தனது ரசிகர்களாக கொண்டுள்ளார். இவரது மகள் கத்தீஜா. இவர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் மின்மினி. இந்தப் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் கத்தீஜா.

இவரது அறிமுக படத்திலேயே, தனது தந்தையைப் போல் இசைக்காக பலரது பாராட்டைப் பெற்றார். இவரது, இந்நிலையில் கத்தீஜா சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் இந்த பேட்டியில் கத்தீஜா பேசியது, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பேட்டியில் தனது மனதிற்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்திய தருணங்கள் குறித்தும் பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

khatija rahman ar rahman minmini

அந்த பேட்டியில், “ ரஹ்மான் சாரின் மகள் என்பதற்காகவே உங்களிடம் வந்து பேசுவார்களே அதை எப்படி எதிர்கொள்வீர்கள், அதை எப்படி அடையாளாம் கண்டு பிடிப்பீர்கள், குறிப்பாக ரஹ்மான் மகள் என்பதற்காகவே உங்களிடம் வந்து பேசுபவர்களையும், கத்திஜாவுக்காக வந்து பேசுபவர்களையும் எப்படி கண்டு பிடிப்பீர்கள் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. இதற்கு அவரது பதில், பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சந்தேகம்: அதாவது கத்தீஜா அளித்த பதிலில், “ அது இப்போது வரை சந்தேகமாகவே உள்ளது. பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு இந்த பிரச்னை உள்ளது. நான் படித்த பள்ளியில் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒரு குரூப்பாக இருப்பார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த, தென்னிந்தியாவைச் சேர்ந்த நாங்கள் அனைவரும் ஒரு குழுவாக இருப்போம். திடீரென என்னிடம் வந்து பேசுவார்கள். ஆனால் நான் அவர்கள் டைப்பாக இருக்கவே மாட்டேன். நான் பள்ளி படித்த காலங்களில், இரட்டை ஜடை போட்டுக் கொண்டு சாக்ஸை மேலே இழுத்துப் போட்டுக்கொண்டு இருப்பேன்.

பள்ளி பருவம்: ஆனால் என்னிடம் வந்து பேசுபவர்கள், ஜடையெல்லாம் ஒரு மாதிரி போட்டுக்கொண்டு வந்து பேசுவார்கள். எப்போதும் சில் செய்துகொண்டு, ஜாலியாக இருப்பவர்கள் என்னிடம் வந்து பேசுவார்கள். எனக்குத் தெரியும் நான் அவர்கள் டைப் இல்லை என. ஆனால் அவர்கள் நான் ரஹ்மான் மகள் என்பதற்காகவே வந்து பேசுவார்கள். அதுபோல எனக்கு பலமுறை தோன்றியுள்ளது.

மின்மினி: இப்போது இந்த எண்ணம் எனக்கு வரும், ஆனால், நமக்கென வருவார்கள். அதுவும் உண்மையாக கத்தீஜாவுக்காக மட்டுமே வருவார்கள். இப்போது மின்மினி வெளியானபோது, முதல் நாள் முதல் காட்சி பார்க்க ரோகினி திரையரங்கிற்குச் சென்றிருந்தேன். அப்போது என்னிடம் வந்து பேசியவர்கள் எல்லாம், முழுக்க முழுக்க கத்தீஜாவுக்காக வந்து பேசியவர்கள். அங்கு வந்தவர்களை வைத்து புரிந்து கொண்டேன், அவர்கள் கத்தீஜாவுக்காக வந்துள்ளார்கள் என்பதை.

khatija rahman ar rahman minmini

மன வருத்தம்: இப்படியான சமயங்களில்தான் புரிந்து கொள்ள முடியும். அப்போதுதான் கண்டு பிடிக்கமுடியும், அவர்கள் கத்தீஜாவுக்காக வந்து பேசுகின்றார்களா, அல்லது அவர்களுக்கு எதாவது காரியம் ஆகவேண்டும் என்பதற்காக வந்து பேசுகின்றார்களா என. சிலபேர் மிகவும் வெளிப்படையாக என்னிடம் அவர்களின் தேவையை கேட்பது என்பது சிறந்தது. ஆனால் தொடக்கத்தில் நண்பர் போல பழகிவிட்டு அதன் பின்னர், தான் என்னிடம் பழக தனது உண்மையான காரணத்தை வெளிக்கொண்டு வருவது என்பது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் என பேசியுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X