AR Rahman: செஃப்பாக மாறிய இசைப்புயலின் மகள்.. பெருமையில் பூரித்த தருணம்!

சென்னை: இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்த மொழிகளில் அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சர்வதேச அளவில் இவரது இசை ரசிகர்களை கவர்ந்து வரும் சூழலில் ஆஸ்கர் விருதையும் பெற்று ஆஸ்கர் நாயகனாக வலம் வருகிறார். அடுத்ததாக தனுஷ் இயக்கம் பிளஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏஆர் ரஹ்மான். இந்தப் படம் வரும் ஜூன் மாதம் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஏஆர் ரகுமான் தன்னுடைய படங்கள் குறித்தும் சொந்த வாழ்க்கை நிகழ்வுகள் குறித்தும், அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தன்னுடைய இளைய மகள் ரஹீமா செஃப் ஆகியுள்ளதாக ஏஆர் ரஹ்மான் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

Music director AR Rahman expressed happiness on his younger daughter

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான்: தனக்கென சர்வதேச அளவில் இசை சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ளவர் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான். ஆஸ்கர் நாயகனாக வலம் வரும் இவர், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்த மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் இசையமைத்து வருகிறார். தன்னுடைய இசை மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் ஏஆர் ரஹ்மான், சொந்த வாழ்க்கையில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரது மகன் அமீன் பாடகராக தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். அடுத்ததாக ஏஆர் ரஹ்மான் இசையில் தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் ராயன் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

ராயன் படம்: ராயன் படம் வரும் ஜூன் மாதம் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. இந்தப் பாடலின்மூலம் தான் எப்போதுமே இசையில் கிங்குதான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ஏஆர் ரஹ்மான். தனுஷ் வாய்ஸில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து இந்தப் பாடல் அதிரடி சரவெடியாக டிரெண்டிங்கில் இருந்தது. ஏஆர் ரஹ்மான் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக காணப்படுகிறார். இதனிடையே தன்னுடைய இளைய மகள் ரஹீமா குறித்து எக்ஸ் தள பக்கத்தில் சிறப்பான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

செஃப்பாக மாறிய இசைப்புயல் மகள்: தன்னுடைய இளையமகள் ரஹீமா செஃப்பாகி உள்ளதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் ஏஆர் ரஹ்மான். அவர் செஃப்புக்கான படிப்பை முடித்ததுடன் அதற்கான சான்றிதழை பெரும் புகைப்படத்தையும் ஏஆர் ரஹ்மான் பகிர்ந்துள்ளார். ஏஆர் ரஹ்மானின் மூத்த மகள் கதீஜா அப்பாவை போலவே இசைத்துறையில் ஈடுபட்டு பின்னணி பாடகியாக உள்ளார். எம்ஏ படித்து முடித்துள்ளார். இந்நிலையில் இளைய மகள் ரஹீமா தற்போது துபாயில் உள்ள ஐசிசிஏ என்ற குக்கிங் பள்ளியில் சமையல் கலை படிப்பை படித்து முடித்துள்ளார். அங்கு நடந்த பட்டமளிப்பு விழாவில் தான் தற்போது ஏஆர் ரகுமான் கலந்து கொண்டுள்ளார்.

அப்பாவாக பெருமை: இந்த நிகழ்வில் அப்பாவாக தான் பெருமை கொள்வதாக தெரிவித்துள்ள ஏஆர் ரஹ்மான், எல்லா புகழும் இறைவனுக்கே என்றும் பதிவிட்டுள்ளார். தன்னுடைய இசைப்பணியில் 30 ஆண்டுகளை கடந்துள்ளார் ஏஆர் ரஹ்மான். இந்நிலையில் தன்னுடைய மகள்கள் மற்றும் மகனின் அடுத்தடுத்த சாதனைகளால் உள்ளம் பூரிக்கும் அப்பாவாக தொடர்ந்து இவரை பார்க்க முடிகிறது. அமீனின் அடுத்தடுத்த பயணங்களிலும் இவர் துணை நின்று வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X