தகுதியற்ற படங்கள்.. ஆஸ்கார் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் சர்ச்சை பேச்சு!

சென்னை : ஆஸ்கார் குறித்து இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் கூறியது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் கோலாகலமாக கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

இதில், தி எலிபெண்ட விஸ்பரர்ஸ் படம் சிறந்த ஆவண குறும்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதேபோல, ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.

95வது ஆஸ்கர் விழா

95வது ஆஸ்கர் விழா

95வது ஆஸ்கர் விருதுக்கான ஆவண குறும்பட பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட தி எலிபெண்ட விஸ்பர்ஸ் படம் சிறந்த ஆவண குறும்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. ஆவண குறும்படத்தை இயக்கிய கார்திகி குன்செல்வெஸ் மற்றும் தயாரிப்பாளர் குனெட் மொன்கோ ஆகியோர் இணைந்து வந்து ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர்.

‘நாட்டு நாட்டு'

‘நாட்டு நாட்டு'

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் மரகதமணி கீரவாணி இசையமைப்பில் உருவான 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. இந்த விருதை பாடலாசிரியர் சந்திரபோஸூம், இசையமைப்பாளர் கீரவாணியும் பெற்றுக் கொண்டனர்.

விளாசும் நெட்டிசன்ஸ்

விளாசும் நெட்டிசன்ஸ்

நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றதை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், ஆஸ்கார் விருதை பெற இயக்குநர் ராஜமௌலி 80 கோடி செலவு செய்தார் என்றும், உண்மையில் ஆஸ்காருக்கு தேர்வான படம் குஜராத்தி படமான செல்லோ ஷோ தான் என்றும்,ஆனால் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் கொடுத்திருக்கிறார்கள் என்று சோஷியல் மீடியாவில் நெட்டிசன்ஸ் பலவிதமான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

தகுதியற்ற படங்கள்

தகுதியற்ற படங்கள்

இந்நிலையில், ஆஸ்கார் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்கர் விருதுகளுக்கு இந்தியாவில் இருந்து தகுதியான படங்கள் அனுப்பப்படுவது இல்லை. சில நேரங்களில் நமது திரைப்படங்கள் ஆஸ்கர் வரை செல்கின்றன. ஆனால் வெற்றி பெறுவதில்லை. அதே சமயம் சில தகுதியற்ற படங்களும் ஆஸ்கருக்கு அனுப்பப்படுகின்றன. ஆஸ்கார் குழுவில் என்ன நடக்கிறது என்பது மூன்றாவது நபர்கள் மூலம் தான் தெரிகிறது. ஆஸ்காருக்கு படங்களை தேர்வு செய்யும் முறை வெளிப்படையாக நடக்க வேண்டு என்றார் ஏஆர் ரஹ்மான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X