லதா மங்கேஷ்கர் மறைவு இசைத்துறையில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது... இசைப்புயல் உருக்கம்

மும்பை : பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தனது 92வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்றைய தினம் காலமானார்.

Recommended Video

பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார் | Latha Mangeshkar Biography

அவரது மறைவுக்கு இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவருடன் இணைந்து பணியாற்றியுள்ள இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு

பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். தனது குரலால் இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். அவரது பல பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாதவை. 30,000க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பல்வேறு இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

கடந்த சில தினங்களால் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிசை பலனின்றி இன்றைய தினம் காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஏஆர் ரஹ்மான் இரங்கல் பதிவு

ஏஆர் ரஹ்மான் இரங்கல் பதிவு

இந்நிலையில் லதா மங்கேஷ்கருடன் இணைந்து பணியாற்றிய இசைப்புயல் ஏஆர் ரஹ்மானும் தனது இரங்கலை தனது ட்விட்டர் பக்கம் மூலமும் வீடியோ மூலமும் வெளிப்படுத்தியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அன்பும் மரியாதையும் பிரார்த்தனைகளும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் லதா மங்கேஷ்கருடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

வீடியோ மூலமும் இரங்கல்

வீடியோ மூலமும் இரங்கல்

இந்நிலையில் வீடியோ ஒன்றின் மூலமும் அவர் லதா மங்கேஷ்கருடனான நினைவுகளை பகிர்ந்துக் கொண்டுள்ளார். லதாவின் ஒவ்வொரு பாடலுக்கான மெனக்கெடல் மற்றும் அவரது தீவிரமான பங்களிப்பு குறித்தும் அவர் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான பங்களிப்பு

சிறப்பான பங்களிப்பு

தான் மிகவும் சிறிய வயதிலேயே அவரது பாடல்களை கேட்டுள்ளதாகவும் ஒவ்வொரு பாடலிலும் அவர் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் லதா மங்கேஷ்கர் இல்லாத இசைத்துறை மிகுந்த வெற்றிடத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவருடன் பணிபுரிந்தது அதிர்ஷ்டம்

அவருடன் பணிபுரிந்தது அதிர்ஷ்டம்

அவர் வெறுமனே பாடகி மட்டுமின்றி, உருது, பெங்காலி, இந்தியிலும் சிறப்பான பாடல்களை செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவருடைய புகைப்படத்தை வைத்துக் கொண்டு திரிந்த காலங்களும் உண்டு என்று குறிப்பிட்டுள்ள ரஹ்மான், அவருடன் இணைந்து பணியாற்றவும் பாட்டுப்பாடவும் தனக்கு வாய்ப்பு கிடைத்தது தன்னுடைய அதிர்ஷ்டம் என்றும் தெரிவித்துள்ளார்.

தன்னை மாற்றிய லதா மங்கேஷ்கர்

தன்னை மாற்றிய லதா மங்கேஷ்கர்

தான் இசையமைப்பை தவிர்த்து பாடகராக எந்த சிரத்தையும் எடுத்துக் கொண்டதில்லை என்றும் ஆனால் ஒவ்வொரு பாட்டிற்கும் நிதானமாக அதை சிறப்பாக கொண்டுவருவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள், பயிற்சிகள் தன்னை மாற்றியதாகவும் இசைப்புயல் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X