Raayan movie: அடங்காத அசுரன் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. ராயன் அப்டேட் கொடுத்த ஏஆர் ரஹ்மான்!

சென்னை: நடிகர் தனுஷ், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் ராயன். ப பாண்டி படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர். படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏஆர் ரஹ்மான். படம் ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாகவிருந்த சூழலில் தற்போது படத்தின் ரிலீஸ் ஜூன் மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் 9ம் தேதி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து இசைப்புயல் ஏஆர் ரகுமான் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் தெரிவித்த சூழலில் தற்போது இசைப்புயல் மீண்டும் புதிய போஸ்டருடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாடலின் துவக்கம் குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார்.

Music director AR Rahman updates about Dhanush s Raayan movie first single

ராயன் படம்: நடிகர் தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராயன். ப பாண்டி படத்தை தொடர்ந்து தற்போது ராயன் படத்தை இயக்கி முடித்துள்ளார் தனுஷ். இந்த படத்தை தொடர்ந்து அடுத்த படத்தையும் இயக்கி வருகிறார். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற அந்த படத்தின் ஷூட்டிங் 70% நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தன்னுடைய வொண்டர் பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்து வருகிறார். படத்தில் முற்றிலும் இளைஞர்கள் நடித்து வரும் சூழலில் தனுஷ் மற்றும் சரத்குமார் படத்தின் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

அடங்காத அசுரன் பாடல்: இந்நிலையில் படம் ஜூன் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான். இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வரும் 9ம் தேதி ரிலீசாகவுள்ளதாக நேற்றைய தினம் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் அடங்காத அசுரன் என்று இந்தப் பாடல் துவங்கவுள்ளதாக தற்போது ஏஆர் ரஹ்மான், தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார். மேலும் படம் ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மிரட்டலான போஸ்டர்: இந்த பதிவில் அவர் படத்தின் மிரட்டலான போஸ்டர் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். வடசென்னையை மையமாகக் கொண்டு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது ராயன் படம். இந்த படத்தில் தனுஷுடன் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், அபர்ணா முரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். படத்தில் தனுஷிற்கு ஜோடி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. படத்தில் அவர் கேங்ஸ்டராக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ப பாண்டி படத்தில் வயதான காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் எதிர்பார்ப்பை மையமாக வைத்து கதைகளத்தை உருவாக்கியிருந்தார் தனுஷ்.

கேங்ஸ்டர் கதைக்களம்: இந்நிலையில் தற்போது கேங்ஸ்டர் கதைக்களத்தில் அவர் களமிறங்கியுள்ளார். இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். படத்தில் அவர் கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவே கூறப்பட்டுள்ளது. ஆனால் கதைக்களம் அவரை சுற்றியே அமைந்துள்ளதாக தெரிகிறது. படத்தில் ரோட்டோர உணவுக்கடையை தனுஷ் தன்னுடைய தம்பிகளுடன் இணைந்து நடத்தி வருவதாகவும் அவரது பிளாஷ்பேக் குடும்பத்தினருக்கு தெரியும்போது ஏற்படும் விளைவுகளையும் படம் பேசுவதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X