AR Rahman: அப்பா குறித்து இதுபோன்ற வதந்திகளை பரப்பாதீங்க.. ஏஆர் ரஹ்மான் மகள் கதீஜா ரஹ்மான் காட்டம்!

சென்னை: இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் இசைப்பயணம் கடந்த 1992ம் ஆண்டில்தான் துவங்கியது. காதல் ரோஜாவை தன்னுடைய இசையில் மலரவிட்ட ஏஆர் ரஹ்மானின் திரைப்பயணம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. தமிழ், தெலுங்கு. இந்தி மட்டுமில்லாமல் ஹாலிவுட் படங்களிலும் அதிரடி கிளப்பி வருகிறார் இசைப்புயல்.

அடுத்தடுத்த தமிழ்ப் படங்களிலும் இவரது அதிரடி இசையை பார்க்க முடிகிறது. சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் வெளியான ராயன் படத்திற்கு மிகச்சிறப்பான இசையை கொடுத்து ரசிகர்களை மிகப்பெரிய உற்சாகத்திற்கு உள்ளாக்கினார். தொடர்ந்து காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

ar rahman kathija rahman tamil cinema
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்: இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் இசைப்பயணம் கடந்த 1992ம் ஆண்டில் உதயமானது. ரோஜா படத்தில் காதல் ரோஜாவே என்று துவங்கிய இவரது பயணம் தற்போதும் தொடர்ந்து வருகிறது. அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் இசைப்புயல். ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளுக்கு சொந்தக்காரராக உள்ள ஏஆர் ரஹ்மான் இசையில் சமீபத்தில் தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ராயன் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. தற்போது அடுத்தடுத்த படங்களில் இசையமைத்து வருகிறார். விரைவில் காதலிக்க நேரமில்லை படம் ஏஆர் ரஹ்மான் இசையில் ரிலீசாகவுள்ளது.

ஏஆர் ரஹ்மான் விவாகரத்து முடிவு: சமீபத்தில் ஏஆர் ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாயிரா பானு இருவரும் தங்களது பிரிவை அறிவித்திருந்தனர். இவர்களின் 29 வருட திருமண வாழ்க்கை தற்போது நிறைவு பெற்றுள்ளதாக இருவருமே உறுதிப்படுத்தியுள்ளனர். தன்னுடைய 30வது ஆண்டு திருமண விழாவை சிறப்பாக கொண்டாடுவேன் என்று தான் கருதியதாக ஏஆர் ரஹ்மான் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். இவர்களின் இந்த முடிவு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அதிர்ச்சியையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியது. பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரப்பப்பட்டன. இதையடுத்து அவரது குடும்பத்தினர் இவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

ஒரு வருடம் பிரேக்?: ஏஆர் ரஹ்மான் மற்றும் சாயிரா பானுவின் விவாகரத்து முடிவிற்கு காரணங்கள் கற்பிக்கப்பட்டன. இதனிடையே தற்போது மீண்டும் ஏஆர் ரஹ்மான் குறித்த வதந்திகள் பரவி வருகின்றன. தன்னுடைய விவாகரத்து பிரச்சினையை தீர்க்கும்வகையில் அவர் சினிமாவில் இருந்து ஒரு வருட காலத்திற்கு இடைவேளை எடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர் கைவசம் 18 படங்கள் உள்ள நிலையில் அவர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

கதீஜா ரஹ்மான் காட்டம்: இந்நிலையில் இத்தகைய உபயோகமில்லாத வதந்திகளை நிறுத்துமாறு ஏஆர் ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய காட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஏஆர் ரஹ்மானின் மூத்த மகளான கதீஜா ரஹ்மான்,தன்னுடைய தந்தையின் இசையில் ரஜினிகாந்தின் எந்திரன் உள்ளிட்ட படங்களில் பாடல்கள் பாடியுள்ள கதீஜா, ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவான மின்மினி என்ற படத்தின்மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இதனிடையே தன்னுடைய பெற்றோரின் இந்த முடிவு குறித்தும் அவ்வப்போது அவர் பேசி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X