வடிவேலு அப்படி செய்வாருனு நான் நினைக்கவே இல்லை.. இசையமைப்பாளர் பரத்வாஜ் சொன்ன ஷாக் நியூஸ்!
சென்னை: வடிவேலு அப்படி செய்வாருனு நான் நினைக்கவே இல்லை என்று இசையமைப்பாளர் பரத்வாஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக கலங்கிக் கொண்டிருந்த நடிகர் வடிவேலு, தனக்கு காமெடி மட்டுமில்லை எந்த கேரக்டர் கொடுத்தாலும் அசத்திவிடுவேன் என்பதை மாமன்னன் படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் படத்தில், மாமன்னனாக நடித்துள்ளார். இவரின் அபரிமிதமான நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
வடிவேலு: நகைச்சுவை நடிகர்,கதாநாயகன்,பாடகர் என பல திறமைகளைக் கொண்ட வடிவேலு, மாமன்னன் படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் 'மலையில தான் தீப்பிடிக்கிது ராசா' பாடலை பாடி இருந்தார். வடிவேலு இதுவரை எத்தனையோ பாடல் வடிவேலு பாடி இருந்தாலும், இசை பயல் இசையில் பாடியுள்ள இந்த பாடல் மனதை உருக்கும் வகையில் இருந்தது.
இசையமைப்பாளர் பரத்வாஜ்: வடிவேலு இப்போது சிறந்த பாடகராகி மாறி இருக்கிறார். ஆனால்,அவர் ஆரம்பகாலத்தில் பாடுவதற்கே தயங்கி இருக்கிறார். இதுகுறித்து இசையமைப்பாளர் பரத்வாஜ் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் வடிவேலு குறித்து பல விஷயங்களை மனம் திறந்து பேசி உள்ளார்.
பாட்டுப்பாட தெரியாது: அதில், 2005ம் ஆண்டு பார்த்திபன் வடிவேலு சேர்ந்து நடித்த குண்டக்க மண்டக்க படத்தில் இடம்பெற்ற வந்துட்டான்யா பாடலை வடிவேலுவை பாட சொன்னேன். ஆனால் அவர் எனக்கு பாட்டுப்பாட தெரியாது என கூறினார். நான் சொல்வதை அப்படியே திருப்பி சொல்லுங்கள் அதுபோதும் என்று முழுபாடலையும் நான் சொல்ல சொல்ல அவர் திருப்பி பாடி முடித்தார். அதை அப்படியே ரெக்கார்ட் செய்து மெட்டு போட்டுவிட்டு, எடிட் செய்து பாடலை ரெடி பண்ணி, அவருக்கு போட்டு காட்டினோம்.
காலில் விழுந்தார்: பாடலை கேட்ட வடிவேலு மகிழ்ச்சியில் அப்படியே திக்குமுக்காடி போய், என் காலில் சட்னு விழுந்துவிட்டார். அந்த நேரத்தில் தான் எனக்கு அவருடைய பெருந்தன்மை தெரிந்தது. ஒரு பெரிய நடிகர் இப்படி செய்வார் என்று நான் நினைக்கவே இல்லை என்று இசையமைப்பாளர் பரத்வாஜ், வடிவேலு குறித்து அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











