தமிழகத்தையே 'ஓ' போட வைத்த பரத்வாஜுக்கு 58 வயசாச்சு!
சென்னை: கடந்த 23 வருடங்களாக இசையமைப்பாளராக உள்ள பரத்வாஜ் தனது 58 வது பிறந்தநாளை கொண்டாடினார்.
கடந்த ஆண்டு வெளியான களவாடிய பொழுதுகள் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்த பரத்வாஜ் 23 ஆண்டுகளாக இசைவிருந்து படைத்துக் கொண்டிருக்கிறார். நேற்று அவர் 58 ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கிறார்.

இசையமைப்பாளர் பரத்வாஜ் பற்றிய சில முக்கிய தகவல்களை இங்கே காணலாம்.
நெல்லைத்தமிழரான இவருக்கு சுந்தரத் தெலுங்கில் அறிமுகம் கிடைத்தது. 1995 ஆம் ஆண்டு "சோகாசு ச்சுடா தரமா" என்ற தெலுங்கு படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
தமிழில் இவரது முதல் படம் காதல் மன்னன், 25 வது படம் அட்டகாசம், 50 வது படம் அசல் என வேறு எந்த இசையமைப்பாளருக்கும் இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடித்ததில்லை. உன்னைப்பார்த்த பின்பு நான்... நானாக இல்லையே... என்று திலோத்தமாவைப் பார்த்து அஜித் பாடும்போது, அதுதான் பரத்வாஜ் என்று அடையாளம் காண வைத்தார்.
பூவேலியில் விடுகதை சொல்லும் பாடலில் நாட்டுப்புற இசையின் மேன்மையையும், அமர்க்களத்தில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடல் மூலம் எஸ்.பி.பி. ஐ புதிய சாதனைக்கும் சொந்தக்காரராக்கிய பெருமை பரத்வாஜையே சேரும்.
பார்த்தேன் ரசித்தேன் திரைப்படத்தில் இவர் இசையமைத்த எனக்கென ஏற்கனவே பாடல் போல, இயக்குனர் சரண் திரைப்படங்களுக்கு இசையமைப்பதற்காகவே பரத்வாஜ் வந்த்திருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு சரண்-பரத்வாஜ் கூடடணி படங்களில் பாடல்கள் ஹிட் அடித்தன.
இன்றைய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை அன்று ஒருவார்த்தை கேக்க ஒருவருடம் காத்திருக்க வைத்தவர்.
சேரனின் ஆட்டோகிராப்பில் அவரின் குரலில் ஒலிக்கும் நியாபகம் வருதே பாடல் கேட்போரின் பால்ய நினைவுகளை அசைபோட வைக்கும், அப்படத்தின் மற்றோரு பாடலான ஒவ்வொரு பூக்களுமே என்றுமே நம்பிக்கை ஊற்றாய் திகழ்கிறது.
ரோஜா கூட்டத்திலிருந்து ஆப்பிள் பெண் கொடுத்து, பாண்டவர் பூமியில் தோழா தோழா என நட்புக்கு மதிப்பளித்து ஜெமினியில் தமிழ்நாட்டையே ஓ போட வைத்தவர் இசையமைப்பாளர் பரத்வாஜ்.


Click it and Unblock the Notifications











