என்னால் நம்பவே முடியவில்லை.. காதல் மன்னன் குறித்து பரத்வாஜ் ட்வீட்
சென்னை: காதல் மன்னன் படம் வெளியாகி 25 வருடங்களை நிறைவு செய்திருக்கும் நிலையில் இசையமைப்பாளர் பரத்வாஜ் ட்வீட் செய்திருக்கிறார்.
கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக தற்போது இருக்கிறார் அஜித். ஆக்ஷன் கதைகளில் நடித்துவ்ரும் அஜித் தனது கேரியரின் ஆரம்பத்தில் காதல் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். அந்தப் படமும் மெகா ஹிட்டாகின. இதனால் அஜித்துக்கென்று தமிழ் சினிமாவில் தனி இடம் உருவானது. ரசிகர்களும் அதிகமாகினர்.

காதல் மன்னன் அஜித்
அஜித்தின் கேரியலில் முக்கியமான படங்களில் காதல் மன்னன் படமும் ஒன்று. நிச்சயதார்த்தம் ஆன பெண்ணை காதலிக்கும் ஹீரோ என்ற லைனோடு உருவான இந்தப் படத்தை கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக சரண் இயக்கினார். இதுதான் சரணுக்கு முதல் படமாகும். அஜித்துடன் கரண், விவேக், எம்.எஸ்.விஸ்வந்தாதன், மானு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் மெகா ஹிட்டானது. இதனையடுத்து சில காலம் காத்ல் மன்னன் அஜித் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

எம்.எஸ்.விஸ்வநாதனுக்காக கஷ்டப்பட்ட இயக்குநர்
காதல் மன்னன் படத்தில் முக்கியமான கேரக்டர் ஒன்றில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனை நடிக்க வைக்க வேண்டும் என இயக்குநர் சரண விரும்பியிருக்கிறார். இதனை சரணும், விவேக்கும் எம்.எஸ்.வியிடம் சொல்ல; விஸ்வநாதனோ ஒத்துக்கொள்ளவில்லை. ஆறு மாதங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் எம்.எஸ்.விஸ்வநாதன் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டார். இதனை சரண் பிலிமிபீட்டுக்கு அளித்திருந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

பட்டையை கிளப்பிய காதல் மன்னன் பாடல்கள்
படம் மெகா ஹிட்டானது மட்டுமின்றி பாடல்களும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தன. குறிப்பாக உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே என்ற பாடல் இன்றுவரை பலரது ப்ளேலிஸ்ட்டில் ஒலித்துக்கொண்டிருப்பது. அதேபோல் கன்னி பெண்கள் நெஞ்சுக்குள் பாடலும் ஹிட்டானது. இப்படி படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. காதல் மன்னன் படம்தான் இசையமைப்பாளர் பரத்வாஜுக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் மன்னன் குறித்து பரத்வாஜ் ட்வீட்
இந்நிலையில் காதல் மன்னன் திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 25 வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றன. இதனையொட்டி இசையமைப்பாளர் பரத்வாஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "5 வருடங்கள் ஆகிவிட்டன என்பதை என்னால் நம்ப முடியவில்லை! தமிழில் எனது முதல் படம், அஜித்குமாருக்கு எனது முதல் படம். மேலும் A (அஜித்) - B (பரத்வாஜ்) - C (சரண்) மூவரின் கூட்டணி. உன்னை பார்த்த பின்பு நான்.. கொண்டாடிய அனைத்து அஜித் ரசிகர்களுக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட்டை ரசிகர்கள் வைரலாக்கிவருகின்றனர். காதல் மன்னன் படத்தில் ஆரம்பித்த அஜித் - சரண் - பரத்வாஜ் கூட்டணி, அமர்க்களம், அட்டகாசம், அசல் என மூன்று படங்கள் பயணித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











