Iman Net Worth: S.Kவை தூக்கி விட்ட இமானுக்கு பிறந்த நாள்.. சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா?
சென்னை: தமிழ் சினிமாவில் இளையராஜாவுக்குப் பிறகு, வில்லேஜ் சப்ஜெக்ட் என்றால், இவர் சரியாக இருப்பார் என பல இயக்குநர்கள் மனதில் நம்பிக்கையை வளர்த்து வைத்திருப்பவர், இசை அமைப்பாளர் இமான். இவர் இன்று தனது 42வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தேசிய விருது வென்ற இசை அமைப்பாளர் டி. இமானின் சொத்து மதிப்பு, ஒரு படத்திற்கு இசை அமைக்க, அவர் எவ்வளவு சம்பளமாகப் பெருகின்றார் என்பது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
இம்மானுவேல் வசந்த் தினகரன் என்பதுதான் இமானின் முழுப்பெயர். சிறு வயதில் இருந்தே இசையின் மீது அதிக ஆர்வம் இவருக்கு இருந்ததால், இசையைக் கற்றுக் கொள்வதில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். சுமார் 22 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் இசை அமைப்பாளராக உள்ள, இமான், தனது ஆரம்ப காலத்தில் கிருத்துவ வழிபாட்டுத் தலங்களில், வழிபாடுகளின்போது இசை அமைத்துக் கொண்டு இருந்தார் என கூறப்படுகின்றது. அதேபோல் சின்னத்திரையில் சீரியல்களுக்கும் இசை அமைத்துக் கொண்டு இருந்தார்.

அறிமுகம்: முதன் முதலாக நடிகர் விஜய், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான தமிழன் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். அங்கிருந்து தொடங்கிய இவரது இசைப் பயணம் வெற்றிகரமாக 22 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதுவரை சுமார் 100 படங்களுக்கு இசை அமைத்துள்ள இமான், அஜித் நடிப்பில் உருவான விஸ்வாசம் படத்தில் இவர் இசை அமைத்த, " கண்ணான கண்ணே" பாடலுக்காக தேசிய விருது வாங்கினார். ஆனால் இதற்கு முன்னர் இவரை இசை உலகின் உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்திய படம் என்றால் அது கும்கி. இந்தப் படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடிக்க, இவருக்கு தென்னிந்திய திரையுலகில் அதிக விருதுகளைப் பெற்றுக் கொடுத்தது.

சம்பளம்: சிவகார்த்திகேயனின் ஆரம்ப கால திரை வாழ்க்கையில் அவரது வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்த இசை அமைப்பாளர்கள் என்றால் அது, இமான் மற்றும் அனிருத் தான். இமான் படத்தின் இசைக்காக மிகவும் மெனக்கெடக்கூடிய இசையமைப்பாளர்களில் ஒருவர். ஆனாலும் இவர் ஒரு படத்திற்கு இசை அமைக்க ரூபாய் 2 கோடிகள் முதல் ரூபாய் 3 கோடிகள் வரை வாங்குகின்றார் என கூறப்படுகின்றது. இது மட்டும் இல்லாமல், விளம்பரங்களுக்கும் இசை அமைக்கின்றார். இவரது ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 9 முதல் 10 கோடிகள் வரை என கூறப்படுகின்றது.

சொத்து மதிப்பு: இவரது சொத்து மதிப்பு சுமார் 55 கோடிகள் முதல் 60 கோடிகள் வரை இருக்கும் என கூறப்படுகின்றது. பி.எம். டபள்யூ, ஆடி போன்ற கார்களும் இமான் வைத்துள்ளார். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு கலைமாமணி விருதினைப் பெற்றார். இன்று தனது 42வது பிறந்த நாளைக் கொண்டாடும் இமானுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள். தொடர்ந்து பல படங்களுக்கு இசை அமைத்து ரசிகர்களை அவர் மகிழ்விக்க வேண்டும் என ஃபிலிமி பீட் சார்பாகவும் வாழ்த்துகள்.



Click it and Unblock the Notifications











