கண்ணான கண்ணே.. பார்வையிழந்த ஆதரவற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்து அசத்திய இமான்! கொண்டாடும் ஃபேன்ஸ்!
Recommended Video
சென்னை: பார்வையற்ற மற்றும் பெற்றோரை இழந்த இளைஞர் ஒருவருக்கு இசையமைப்பாளர் இமான் பாட்டுப்பாட வாய்ப்பு கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டியை சேர்ந்த திருமூர்த்தி என்ற இளைஞர் பார்வையற்ற ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். இளம் வயதிலேயே பெற்றோரையும் இழந்து ஆதரவற்று தவித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது இனிமையான குரலால் கண்ணானே கண்ணே பாடலை பாடினார். இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் சிலர் பதிவிட்டனர்.
நம்பரை கேட்ட இமான்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதனை கவனித்த இசையமைப்பாளர் டி இமான், இந்த இளைஞரின் போன் நம்பரை கேட்டு தனது டிவிட்டர் பக்ககத்தில் டிவிட்டியிருந்தார்.

இசையில் பாட வாய்ப்பு
அதனை பார்த்த சிலர், அந்த இளைஞரின் நம்பரை பெற்று தந்தனர். இதனைத்தொடர்ந்து திருமூர்த்தியிடம் பேசிய இசையமைப்பாளர் இமான், அவருக்கு தனது இசையில் பாட வாய்ப்பு தருவதாக தெரிவித்துள்ளார்.
பாட வாய்ப்பு தருவோம்
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தொடர்பை பகிர்ந்தமைக்கு அனைவருக்கும் நன்றி. அந்த நபரிடம் பேசிவிட்டேன். விரைவில் அவருக்கு ஒரு பாடலுக்கு வாய்ப்பு கொடுப்போம். கடவுள் அவருடன் இருக்கட்டும் அவருக்கு ஆறுதலை கொடுக்கட்டும். திருமூர்த்திக்கு மகிழ்ச்சியான நாட்கள் உள்ளன.. கடவுளை புகழுங்கள்.. என பதிவிட்டிருக்கிறார்.
நன்றி இமான்
இதனை பார்த்த நெட்டிசன்கள் இமானை பாராட்டியுள்ளனர். மேலும் பார்வையற்ற இளைஞரின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்த உங்களுக்கு நன்றி என்றும் டிவிட்டியிருக்கின்றனர் நெட்டிசன்கள்.
பாத்துப்பான் அண்ணா..
நம்ம கூட இருக்குறவங்கள நம்ம பாத்துக்கிட்டா
நமக்கு மேல இருக்குறவன் நம்மல பாத்துப்பான்..நமக்கு மேல இருக்குறவன் கண்டிப்பாக உங்களை பாத்துப்பான் அண்ணா என்று பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











