twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'இறைவன் உங்களைப் பார்த்து சிரிக்கணும்'... இமானுக்கு விவேக் சொன்ன அட்வைஸ்!

    விவேக் நடித்துள்ள எழுமின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் டி.இமான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    |

    சென்னை: "எழுமின்" மாதிரியான சினிமாக்கள் நிறைய வரவேண்டும் என்று இசையமைப்பாளர் டி.இமான் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    "வையம் மீடியாஸ்" சார்பில் தயாரிப்பாளர் V.P.விஜி தயாரித்து, இயக்கி இருக்கிற திரைப்படம் "எழுமின்". தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பலநூறு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தற்காப்பு கலைஞர்கள் மத்தியில் சென்னை கலைவானர் அரங்கத்தில் நடைபெற்றது.

    Music director D.Iman praises Ezhumin

    இந்த விழாவில் "செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்" திரு. கடம்பூர் ராஜு, "விளையாட்டு துறை அமைச்சர்" திரு. பாலகிருஷ்ண ரெட்டி, நடிகர்கள் விவேக், ஆரி, "ஹிப்-ஹாப்" ஆதி, இசையமைப்பாளர்கள் டி.இமான், ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர்கள் மயில்சாமி, பிரேம்குமார், உதயா, மற்றும் தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய V.P.விஜி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.

    விழாவில் பேசிய இசையமைப்பாளர் டி.இமான், "எழுமின்" மாதிரியான சினிமாக்கள் நிறைய வரவேண்டும் என விருப்பம் தெரிவித்தார். விழாவில் அவர் பேசியதாவது,
    "மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. காரணம், விவேக் நடித்த நிறைய படங்களுக்கு ஆரம்ப காலகட்டங்களில் இசையமைத்திருக்கிறேன். அப்போது ஒன்றை புரிந்துகொண்டேன், விவேக் சார் ஒரு நல்ல மோட்டிவேட்டர்.

    Music director D.Iman praises Ezhumin

    தொடக்கத்தில் நிறைய குழப்பங்களோடு இருந்த என்னை, வழிநடத்தியவர்களில் விவேக் சார் முக்கியமானவர். சுந்தர். சி இயக்கத்தில் "தகதிமிதா" என்ற படத்திற்கு நான் இசையமைத்திருந்தேன். அந்த படத்தின் பாடல்களை பிடித்திருந்ததால் என்னிடம் தொலைபேசியில் விவேக் சார் பேசினார். "காதலை யாரடி முதலில் சொல்வது" என்ற பாடலை மிகவும் பாராட்டி பேசினார்.

    Music director D.Iman praises Ezhumin

    அப்போது அவர் ஒன்றைச் சொன்னார், "இறைவன் உங்களைப் பார்த்து சிரிக்கணும்" என்று. காலம் போக போகத் தான் தெரிந்தது அன்று அவர் சொன்னதற்கான அர்த்தம். "அரைஸ் அவேக் அச்சிவ்" என்று ஒவ்வொருவருக்கும் யாராவது ஒருவர் சொல்ல வேண்டும். இளைஞர்களை மோட்டிவேட் செய்யக் கூடிய இந்த "எழுமின்" மாதிரியான சினிமாக்கள் நிறைய வரவேண்டும். இருட்டு அறைக்குள்ளே நல்லதையும் விதைக்க முடியும் என்பதனை நிரூபிக்க வேண்டும். அந்த வகையில் நிச்சயம் "எழுமின்" மாணவர்களை மொட்டிவேட் செய்யும்" என அவர் தெரிவத்தார்.

    English summary
    While speaking in the audio launch function of actor Vivek's Ezhumin, music director D.Iman said that more films like Ezhumin should come in future.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X