தமிழன் முதல் அண்ணாத்த வரை... ரசிகர் மனங்களை அடிச்சு தூக்கிய டி.இமான் பிறந்தநாள் ஸ்பெஷல்

சென்னை : தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி சினிமாக்களில் தனது அற்புதமான இசையால் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர் இசையமைப்பாளர் டி.இமான். இவர் தனது 39வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

இமானின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலர் சோஷியல் மீடியாவில் வாழ்த்து பகிர்ந்து வருகின்றனர். நடிகர் ஆர்யா, சன் பிக்சர்ஸ் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இமானின் பிறந்தநாளை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

Music director D.Imman birthday special

திரையுலக பயணம்

திரையுலக பயணம்

2002 ம் ஆண்டு விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் திரையலகில் தனது சினிமா பயணத்தை துவக்கினார் இமான். தற்போது வரை 100 க்கும் அதிகமான படங்களில் இசையமைத்து விட்டார். பின்னணி இசை மட்டுமின்றி பல படங்களில் சூப்பர் ஹிட்டான பாடல்களையும் பாடி உள்ளார். பிரபலமான டிவி சீரியல் டைட்டில் சாங்கிற்கும் இவர் இசையமைத்துள்ளார்.

மிகப் பெரிய கெளரவம்

மிகப் பெரிய கெளரவம்


சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வாங்கிய 5வது தமிழ் இசையமைப்பாளர் இமான் தான். பல விருதுகளை வென்றிருந்தாலும் டொரன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான தூதராக இவர் நியமிக்கப்பட்டதை மிகப் பெரிய கெளரமாக கருதி வருகிறார். 100 க்கும் மேற்பட்ட படங்கள், 20 க்கும் மேற்பட்ட டிவி சீரியல்களுக்கு இமான் இசையமைத்துள்ளார். அவரை கெளரவிக்கும் விதமாக இந்த பதவி கொடுக்கப்பட்டதாம்.

அட...இது தெரியாம போச்சே

அட...இது தெரியாம போச்சே

இன்று பிரபல இசையமைப்பாளராக இமானை அனைவருக்கும் தெரியும். ஆனால் 15 வயதில் இசைப்பயணத்தை துவக்கிய இமான் முதல் முதலில் இசையமைத்தது மிகவும் பிரபலமான டிவி சீரியலான கிருஷ்ணதாசி சீரியலுக்கு தான். இந்த சீரியலின் டைட்டில் சாங்கான சிகரம் பார்த்தாய் பாடல் அந்த சமயத்தில் மிக பிரபலமாக இருந்தது. தனது முதல் படமான தமிழனில் இசையமைத்ததுடன் மாட்டு மாட்டு பாடலை பாடியதும் இவர் தான். கடைசியாக அஜித்தின் விஸ்வாசம் படத்தில் செம ஹிட் பாடலான அடிச்சுதூக்கு பாடலை பாடியதும் இமான் தான். கும்கி படத்தில் செம ஹிட்டான ஒன்னும் புரியல பாடலை பாடியதும் இவர் தான்.

சிவகார்த்திகேயன் தான் அதிகம்

சிவகார்த்திகேயன் தான் அதிகம்

தற்போதும் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இமான். எதற்கும் துணிந்தவன், கேப்டன், யுத்த சத்தம், பொய்க்கால் குதிரை, மை டியர் பூதம் ஆகிய படங்களில் பணியாற்றி வருகிறார். தனது இசையில் மட்டுமின்றி யுவன்சங்கர் ராஜா போன்ற பிற இசையமைப்பாளர்களின் இசையிலும் பின்னணி பாடி உள்ளார் இமான். கடைசியாக இவர் இசையமைத்துள்ள அண்ணாத்த படம், ரஜினிக்காக இவர் இசையமைத்த முதல் படமாகும். அதிகபட்சமாக சிவகார்த்திகேயன் நடித்த 5 படங்களுக்கு இமான் இசையமைத்துள்ளார்.

இது புது தகவலா இருக்கே

இது புது தகவலா இருக்கே

டி.இமானின் முழு பெயர் இமானுவேல் வசந்த் தினகரன். இவர் முதன் முதலில் இசையமைத்தது கார்த்திக், மீனா நடித்த காதலே ஸ்வரம் என்ற படத்திற்கு தான். ஆனால் அந்த படம் வெளிவராமல் போனதால், விஜய் நடித்த தமிழன் படம் இவரின் முதல் படமானது. இமானின் 25வது படம் மருதமலை, 50வது படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், 75வது படம் வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, 100 வது படம் டிக் டிக் டிக்.

முதல் படம், ஒரே படம்

முதல் படம், ஒரே படம்

விஜய்க்காக தமிழன், ஜில்லா ஆகிய இருபடங்களுக்கு இமான் இசையமைத்துள்ளார். ஆனால் அஜித்திற்காக இவர் இசையமைத்த ஒரே படம் விஸ்வாசம் மட்டும் தான். அதே போல் ரஜினிக்காக இவர் இசையமைத்த ஒரே படம் அண்ணாத்த தான். அண்ணாத்த படத்தில் இடம்பெற்ற 4 பாடல்களும் செம ஹிட். இதில் ஃபஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட்ட அண்ணாத்த பாடலை எஸ்பிபி பாடி இருந்தார். எஸ்பிபி.,க்காக இமான் இசையமைத்த முதலும், கடைசியுமான பாடல் அது தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X