இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார்.. சிவகார்த்திகேயன் விவகாரம் குறித்து மனம் திறந்து பேசிய டி.இமான்!

சென்னை: சிவகார்த்திகேயன் குறித்த கேள்விக்கு பதில் அளித்த இமான் எல்லாத்தையும் இறைவன் பார்த்துக்கொள்வார் என்றார்.

இசையமைப்பாளர் டி.இமான் அண்மையில் அளித்த பேட்டியில், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், இனிமேல் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணிபுரிய வாய்ப்பே இல்லை என்றும் கூறியிருந்தார்.

Music director d imman opens up about sivakarthikeyan issue

என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவர் செய்ததை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.

சிவகார்த்திகேயன்-டிஇமான்: இமானின் இந்த பேட்டி இணையத்தில் பெரும் புயலை கிளப்பியது. மேலும், இமான் முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ய சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று சோசியல் மீடியாவில் செய்தி பரவியது. மேலும், டி.இமானின் முன்னாள் மனைவி மோனிகாவும், சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசியதால், அது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

துரோகம்: பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் பேராதரவு கொண்டாடும் நடிகராக சிவகார்த்திகேயன் இருக்கும் நிலையில், நன்றாக வாழ்ந்த குடும்பத்தை பிரிந்து துரோகம் செய்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும், சிவகார்த்திகேயன் செய்த துரோகத்திற்கு ஆதாரம் இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.

பட பூஜை: சென்னை அடையாறில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஐஸ்வர்யா ராஜேஷ், நடிப்பில் சவரிமுத்து என்னும் இயக்குநர் இயக்கும் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் வைபவ், இசையமைப்பாளர் டி. இமான், சுனில் குமார் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடவுள் பாத்துப்பார்: அப்போது செய்தியாளரை சந்தித்த இமானிடம் சிவகார்த்திகேயன் விவகாரம் இணையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பதில் கொடுத்து முற்றுப்புள்ளி வையுங்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த டி இமான், அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொள்வார், எது சரி தப்பு என்று அவருக்கு தெரியும். இதில் முற்றுப்புள்ளி வைக்க ஒன்றும் இல்லை, அவர் வைப்பார், எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சிக்கல்: சிவகார்த்திகேயன் டி இமான் விவகாரம் ஒரு மாதத்திற்கு மேலான போதும், தற்போது அது சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகவே உள்ளது. பிரச்சனை தலைக்கு மேல் போனபோதும், சிவகார்த்திகேயன் இந்த விவகாரத்தில் எந்த விதமான கருத்தும் சொல்லாமல் மௌனமாக இருப்பது சிவகார்த்திகேயனுக்கு மேலும் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X