இயக்குனராகிறார் இசையமைப்பாளர் ..முதல் நீ முடிவும் நீ.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் !

சென்னை : இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளியான எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தர்புகா சிவா.

தமிழில் இவர் பல படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது.

இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் கலக்கி வந்த தர்புகா சிவா தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இயக்குனர் அவதாரம்

இயக்குனர் அவதாரம்

சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினத்தின் உதவி இயக்குனர் தனசேகரன் இயக்கிய வானம் கொட்டட்டும் திரைப்படத்தின் மூலம் பிரபல பாடகர் சித் ஶ்ரீராம் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்திருந்த நிலையில், தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்திற்கு இசையமைத்திருந்த இசையமைப்பாளர் தர்புகா சிவா தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

இசையமைப்பாளர் யாரென

இசையமைப்பாளர் யாரென

எனை நோக்கி பாயும் தோட்டா சூப்பர் ஹிட் பாடல்களுடன் சென்ற ஆண்டு வெளியான நிலையில், இந்த திரைப்படத்தின் பாடல்கள் படம் வெளியாவதற்கு முன்பே வெளியாகி சக்கை போடு போட்டு இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியது. மேலும் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் இசையமைப்பாளர் யாரென படக்குழு நீண்ட நாட்களாக வெளிப்படுத்தாமல் இருந்த நிலையில், அது ராஜதந்திரம் திரைப்படத்தில் தீபன் கதாபாத்திரத்தில் நடித்த தர்புகா சிவா என தெரிந்ததும் பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

எனை நோக்கி பாயும் தோட்டா

எனை நோக்கி பாயும் தோட்டா

தர்புகா சிவா அதிகாரம் 79, பலே வெள்ளையத்தேவா, கிடாரி, நிமிர் மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படங்களை தொடர்ந்து தற்பொழுது தரமணி புகழ் வசந்த் ரவி நடித்து வரும் "ராக்கி" திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார். எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் மிகப் பெரிய ஹிட்டான நிலையில் தர்புகா சிவா அடுத்தடுத்து இசையமைக்க இருக்கும் திரைப்படங்களை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

நகைச்சுவை காட்சிகள்

நகைச்சுவை காட்சிகள்

பதினாறு, ராஜதந்திரம், மோ மற்றும் தொடரி உள்ளிட்ட திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ரசிக்க வைத்து இருந்தார். குறிப்பாக ராஜதந்திரம் திரைப்படத்தில் இவரது நகைச்சுவை காட்சிகள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது தமிழ் ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் தான் இயக்குனராக அறிமுகமாக உள்ள திரைப்படத்தின் பெயரையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

இசையமைப்பாளர் நடிகர் என பல்வேறு அவதாரங்கள் எடுத்து வந்த தர்புகா சிவா தற்பொழுது "முதல் நீ முடிவும் நீ" என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மணி நேரத்திற்கு முன்பு சமூக வலைதளங்களில் பகிர்ந்து தர்புகா சிவா அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இயக்குனராக மட்டுமல்லாமல் இசையும்

இயக்குனராக மட்டுமல்லாமல் இசையும்

1999 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஏழாம் வகுப்பு பள்ளி குழு புகைப்படம் அடங்கிய இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், இந்த திரைப்படம் பள்ளியில் நடக்கும் காதலை பற்றிய கதையாக இருக்கும் என பலரும் யூகித்து வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் விவரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. மேலும் தர்புகா சிவா இந்த படத்திற்கு இயக்குனராக மட்டுமல்லாமல் இசையும் அமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X