Deva Birthday - தேனிசை தென்றலுக்கு பிறந்தநாள்.. அனிருத்துக்காக தேவா செய்த செம விஷயம்.. செம மனுஷன்

சென்னை: Deva Birthday (தேவா பிறந்தநாள்) தேனிசை தென்றல் என்று ரசிகர்களால் புகழப்படும் இசையமைப்பாளர் தேவாவின் 73ஆவது பிறந்தாள் இன்று

இந்து படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் தேவா. முதல் படத்தின் பாடல்கள் ஹிட்டடித்ததை அடுத்து கவனிக்கப்படும் இசையமைப்பாளராக மாறினார். அடுத்தடுத்த படங்களில் மெலோடி, கானா என வெரைட்டியாக இசையை கொடுத்தார். எனவே ரசிகர்களால் தேனிசை தென்றல் என்று அழைக்கப்படுகிறார். 90களில் ஏ.ஆர்.ரஹ்மான் உச்சத்தில் இருந்தபோதும் தேவாவின் கொடியும் உயரவே பறந்தது.

Music Director Deva Birthday Here is The Unknown Side about Deva

முன்னணி ஹீரோக்கள்: 90களில் முன்னணி ஹீரோக்களாக இருந்த ரஜினி, கமல் அப்போது வளர்ந்துவரும் ஹீரோக்களாக இருந்த அஜித், விஜய், பிரசாந்த், சூர்யா என அனைவரது படங்களுக்கும் தேவா இசையமைத்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு இசையும் வேறு வேறு மாதிரி இருந்ததால் அத்தனையும் ஹிட்டடித்தன. குறிப்பாக ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் தொடர்ந்து தேவாவுக்கு வாய்ப்புகளை கொடுக்க ஆரம்பித்தனர்.

தேனிசை தென்றல்: தேவாவை பொறுத்தவரை எந்த ஜானரிலும் அசால்ட்டாக சிக்சர் அடித்தவர். ஆசை, அப்பு, முகவரி, குஷி, ஆஹா, காதல் கோட்டை, அருணாச்சலம், பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் என பல படங்களில் அருமையான மெலோடிகளை கொடுத்தவர். அவரது மெலோடி பாடல்கள் காலங்கடந்தும் இன்றும் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக 90ஸ் கிட்ஸுகளின் டாப் இசையமைப்பாளர்களின் லிஸ்ட்டில் முதல் ஐந்து இடங்களுக்குள் தேவா கண்டிப்பாக இருப்பார்.

கானா தேவா: மெலோடியில் எப்படி தன்னை நிரூபித்தாரோ அதேபோல் கானா பாடலிலும் தன்னை நிரூபித்தவர் தேவா. இன்னும் சொல்லப்போனால் கோலிவுட்டில் கானாவுக்கென்று அடையாளமாக இருப்பவரும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை ஒரு கானா பாடல் பாட வேண்டுமென்றால் அதற்கு தேவாவின் ரெஃபரன்ஸ்தான் எடுக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. உச்சத்தில் இருந்த தேவா காலம் செல்ல செல்ல சினிமாவிலிருந்து ஒதுங்கினார். கடைசியாக அவர் சிங்கப்பூரில் ஒளிபரப்பாகும் ஒரு தமிழ் நாடகத்துக்கு இசையமைத்தார்.

அனிருத்துக்காக தேவா செய்த செயல்: இந்த சூழலில் அவர் இன்று தனது 73ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அவர் செய்த செயல் குறித்து பார்க்கலாம். அதாவது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த தேவாவை மான் கராத்தே படத்தின் ஓப்பன் தி டாஸ்மாக் பாடல் பாடுவதற்காக அனிருத் அழைத்து வந்தார். அந்தப் பாடலும் ஹிட்டடித்துவிட்டது.

அதற்கு பிறகு அனிருத்துக்கும் தேவாவுக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டிருக்கிறது. சூழல் இப்படி இருக்க தர்பான் படத்துக்காக அனிருத் இசையமைத்தபோது ரஜினியின் சூப்பர் ஸ்டார் டைட்டிலுக்கு தேவா ஏற்கனவே போட்டிருக்கும் இசையை பயன்படுத்த முடிவெடுத்து தேவாவிடம் அனுமதி கேட்டிருக்கிறார். அதனியடுத்து எதையுமே யோசிக்காத தேவா சரி ப்பா பண்ணிக்கோ என்று சொல்லியிருக்கிறார்.

உடனடியாக அனிருத் சார் நீங்களே வந்து அதை ரெக்கார்ட் செய்துகொடுங்கள் என்று சொல்ல; எதையுமே யோசிக்காத தேவா அனிருத்தின் ஸ்டூடியோவுக்கு வந்து அந்த இசையை மட்டுமில்லாமல் கண்ணுல திமிரு பாடலுக்கு மியுசிக் கண்டக்ட் செய்து முழுவதும் ரெக்கார்ட் செய்துகொடுத்தாராம். அதனை ஒரு ரசிகராக அனிருத் ஸ்டூடியோவில் அமைதியாக அமர்ந்து பார்த்து ரசித்தாராம். இந்த தகவலை இசையமைப்பாளர் அனிருத் ஒரு மேடையில் பகிர்ந்துகொண்டார். பிறந்தநாள் வாழ்த்துகள் தேவா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X