Deva: தனுஷ் படத்தில் வில்லனாக களமிறங்கும் இசையமைப்பாளர் தேவா.. அவரே பகிர்ந்த தகவல்!

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படம் டிசம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளது.

பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப்படம் சுதந்திர காலகட்டத்தின் முந்தைய காலகட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Music director Deva going to join D50 movie as a Main villain

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய டி50 படத்தை இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

தனுஷின் டி50 படத்தில் வில்லனாக களமிறங்கும் இசையமைப்பாளர் தேவா: நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாஸ் காட்டியது வாத்தி படம். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியானது வாத்தி. இந்தப் படம் தெலுங்கில் சார் என வெளியான நிலையில், அங்கும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வெற்றிப்படமாக மாறியது. இந்தப் படத்தின்மூலம் தன்னுடைய மாஸை தெலுங்கிலும் நிரூபித்துள்ளார் தனுஷ். தொடர்ந்து பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் மட்டுமில்லாமல் டோலிவுட்டிலும் தான் சூப்பர் என்பதை அவர் நிரூபித்துள்ளார்.

இந்தப் படத்தை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் டிசம்பர் 15ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. முன்னதாக தீபாவளி ரிலீசாக படம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், சூட்டிங்கில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. இந்தப் படம் சுதந்திர போராட்ட காலகட்டத்தை கதைக்களமாக கொண்டுள்ளது.

படத்தின் போஸ்டர், டீசர் ஆகியவை வெளியாகி அதிரடியாக ரசிகர்களை கவர்ந்த நிலையில், படத்தின் டிரெயிலர் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகிவரும் டி50 படத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா முரளி ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் டி50 படம் வடசென்னையை மையமாக கொண்ட கதைக்களத்தில் உருவாகிவருகிறது. தற்போது படத்தின் சூட்டிங்கை மிகவும் விறுவிறுப்பாக நடத்திவரும் தனுஷ், அக்டோபர் மாதத்திற்குள் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக சேகர் கம்முலாவின் இயக்கத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் டி50 படத்தில் பிரபல இசையமைப்பாளர் தேவாவை வில்லனாக தனுஷ் கமிட் செய்துள்ளதாக தற்போது தேவா தன்னுடைய சமீபத்திய பேட்டியில் உறுதி செய்துள்ளார். தன்னை தொலைபேசி மூலம் அழைத்து, இந்தக் கேரக்டரில் தான் நடிக்க தனுஷ் கேட்டதாகவும் தன்னை எதற்காக செலக்ட் செய்தீர்கள் என்று தான் கேள்வி எழுப்பிய நிலையில், தன்னுடைய வட சென்னை ஸ்லாங் சிறப்பாக இருக்கும் என்றும் படத்தில் வில்லன் கேரக்டருக்கு அது தேவைப்படுவதாக தனுஷ் கூறியதாகவும் தேவா மேலும் கூறியுள்ளார்.

ஆனால் தன்னால் டயலாக்குகளை அதிகமாக நியாபகம் வைத்துக் கொள்ள முடியாது என்றும் அதனால் அதிக டேக்குகளை தான் வாங்குவேன் என்று கூறியதாகவும் இதனால் உடன் நடிக்கும் நடிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தான் தனுஷிடம் கூறியதாகவும் தேவா தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். இதைக்கேட்ட தனுஷ், அதனால் பரவாயில்லை சார் என்று தெரிவித்ததாகவும் தேவா தன்னுடைய பேட்டியில் மேலும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் ரசிகர்களுக்கு அடுத்த சூப்பர் வில்லன் கிடைத்துள்ளதாக ரசிகர்கள் தற்போது கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X