ஒரே ஒரு போன் காலில் ரஜினியின் படம் .. ஆத்தா நான் பாஸாயிட்டேன்!

சென்னை : கானா பாடல்களுக்கு பெயர் போனவர் இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா

கானா பாடல்கள் மட்டும் அல்லாமல் எக்கச்சக்க சூப்பர் ஹிட் மெலோடி பாடல்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார்

பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள தேனிசைத் தென்றல் தேவா ஒரே ஒரு போன் காலில் ரஜினி படம் கிடைத்த அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்

 கலக்கலான கானா பாடல்களுக்கு

கலக்கலான கானா பாடல்களுக்கு

ரஜினி,விஜயகாந்த், கமலஹாசன், கார்த்திக், பிரபு, மோகன் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தவர் தேனிசை தென்றல் தேவா. குறிப்பாக சென்னையை சார்ந்த கானா பாடல்களை மீட்டெடுத்த பெருமை தேவாவுக்கு எப்போதுமே உண்டு. கலக்கலான கானா பாடல்களுக்கு பெயர் போன தேவா பல அட்டகாசமான சூப்பர் ஹிட் மெலோடி பாடல்களையும் தமிழ் சினிமாவில் வழங்கியுள்ளார். இசை அமைப்பாளராக மட்டுமல்லாமல் பாடகராகவும் பல படங்களுக்கு பாடல்களை பாடியுள்ள தேவா ஒரே ஒரு போன் காலில் ரஜினி படத்தில் கமிட்டானார் அந்த அனுபவத்தைப் பற்றி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்

 ரஜினிகாந்த் தான் ஹீரோ

ரஜினிகாந்த் தான் ஹீரோ

ஒருநாள் ஏவிஎம்மில் கம்போஸிங்கில் இருந்த போது கவிதாலயாவிலிருந்து இயக்குனர் கே பாலச்சந்திரிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது பேசிய இயக்குநர் கே பாலச்சந்தர் தன்னுடைய படம் ஒன்று இருக்கு இசை அமைக்க வேண்டும் என கேட்டுள்ளார் அதற்கு தேவா என்ன சார் இப்படி கேக்குறீங்க இதுக்குத்தானே நான் இத்தனை நாள் தவம் கிடக்கிறேன் எப்ப சார் வரணும் என கேட்டுள்ளார். நான் இயக்குனர் அல்ல என்னுடைய சிஷ்யன் ஒருவன் தான் அந்த படத்தை இயக்குகிறார். யார் ஹீரோ என்று கேட்க மாட்டாயா. ரஜினிகாந்த் தான் ஹீரோ என கூறியுள்ளார் கே பாலச்சந்தர்.

 ஆத்தா நான் பாஸாயிட்டேன்

ஆத்தா நான் பாஸாயிட்டேன்

அதைக்கேட்ட தேவாவுக்கு ஆத்தா நான் பாஸாயிட்டேன் என்பதுபோல உள்ளுக்குள் ஒரு பேரானந்தம் ஆர்ஆர் ஓடியது. இதற்கு மேல் என்ன வேண்டும் கே பாலச்சந்தர் எனும் இமயத்தின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் பணியாற்றுவது எவ்வளவு பெரிய பாக்கியம் என நினைத்த தேவா உடனடியாக கால்ஷீட்டை ஒதுக்கியுள்ளார். தேவாவின் இசையில் வெளியான அண்ணாமலை பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது படமும் பட்டையைக் கிளப்பியது

 தேவாவுக்கு கிடைத்த வாய்ப்பு

தேவாவுக்கு கிடைத்த வாய்ப்பு

இதில் ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள் என்ற பாடல் முதலில் ரெக்க கட்டி பறக்குதடி கொக்கரக்கோ சேவலு என தேவா எழுதியுள்ளார். அதை மாற்றி அண்ணாமலை பெயரை பாடலில் வைக்கச் சொல்லி உள்ளார் வைரமுத்து . பின் ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள் என எழுதியுள்ளார். இந்தப் பாடல் எந்த அளவிற்கு ஹிட் என்பது சொல்லி பெரிய தேவையில்லை பட்டி தொட்டி எங்கும் பரவியது . இவ்வாறு அண்ணாமலை படத்தில் தேவாவுக்கு கிடைத்த வாய்ப்பை பற்றி தேனிசைத் தென்றல் தேவா நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X