மாவீரர் தின சிறப்பு இசைக் கச்சேரி.. ஷூவை கழட்டி வைத்துவிட்டு பாடிய தேவா.. புல்லரிக்குதுங்க!
சென்னை: இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா, தமிழ் திரையுலகில் அவரது இசைக்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தனது இசை மூலம் பல மக்களைச் சென்று சேர்ந்தவரான தேவா, தமிழர்கள் மத்தியில் என்றைக்கும் கொண்டாடத் தகுந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். இப்படி இருக்கும்போது தேவா, பிரான்ஸ் நாட்டில், மாவீரர் தினத்தில் நடத்திய இசைக் கச்சேரியில் மாவீரர் தின சிறப்பு பாடலைப் பாடும்போது தனது காலணிகளை கழட்டி வைத்துவிட்டு பாடியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
தேனிசைத் தென்றல் தேவா... அவர் இல்லையென்றால் 90களின் இறுதியும் 2000களின் தொடக்கமும் இவ்வளவு கலகலப்பாக ஒலித்திருக்காது. அது உறுதி என்று சொல்லும் அளவுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். அதுவும் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் என்ற இரண்டு ஜாம்பவான்களுக்கு நடுவே தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் தேவா.

குறிப்பாகச் சொல்லப்போனால், 1987-ல் இளையராஜாவின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்திலேயே தேவா அறிமுகமானார். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இளையராஜாவுடனும், பின்னர் 90களின் பிற்பகுதியிலும் 2000களின் தொடக்கத்திலும் ஏ.ஆர்.ரஹ்மானின் பிரமாண்ட எழுச்சியுடனும் நேரடியாக மோத வேண்டியிருந்தது. இருந்தும் தேவாவின் இசை எப்போதும் தனித்துவமாக, மக்களின் நாடி துடிப்பில் ஊடுருவி நிற்கும் அளவுக்கு இருக்கிறது. இன்றைக்கும் ஒரு கொண்டாட்டம் என்றால் அது தேவாவின் பாடல்கள் ஒலிக்காமல் முடிவது இல்லை.
பெருமை: அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கூட தேவா பேசுகையில், தனது பாடல்கள் இல்லாமல் ஆயுத பூஜை நடப்பதில்லை, அம்மன் கோவில் விசேஷங்கள் நடப்பதில்லை என்று பெருமையாக சொன்னார். அவர் சொன்ன வார்த்தைகள் 100க்கு 100 சதவீதம் உண்மை. அவரது பாடல்கள் இல்லாமல் அந்த நிகழ்ச்சிகள் நடைபெறுவது இல்லை. இப்படி இருக்கும்போது, மாவீரர் தினம் தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு இசைக் கச்சேரியில் தேனிசைத் தென்றல் தேவா பாடுவதற்கு முன்னர் செய்த செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஷூவைக் கழட்டிய தேவா: அதாவது மாவீரர் தின சிறப்பு பாடலை பாடுவதற்கு முன்னர், தேவா தான் அணிந்திருந்த காலனியான ஷூவைக் கழட்டி வைத்துவிட்டு, பாடினார். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும் தேவாவின் இந்த உணர்வு எங்களுக்கு மெய் சிலிர்க்க வைக்கிறது. மாவீரர்களுக்கு அவருக்கு விருப்பமான முறையில் புகழ் வணக்கத்தை செலுத்தி உள்ளார் என்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











