இசையமைப்பாளர் தேவா தாயார் மரணம் - ஜெயலலிதா இரங்கல்
சென்னை: பிரபல இசையமைப்பாளர் தேவாவின் தாயார் கிருஷ்ணவேணி சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81.
மறைந்த கிருஷ்ணவேணியின் கணவர் பெயர் சொக்கலிங்கம். கிருஷ்ணவேணி-சொக்கலிங்கம் தம்பதிக்கு, தேவா, சம்பத், சபேஷ், முரளி, சிவா ஆகிய 5 மகன்களும், செல்வி என்ற ஒரேயொரு மகளும் இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தேவாவின் தாயார் கிருஷ்ணவேணி மறைவு குறித்து, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவரும், திரைப்பட இசையமைப்பாளருமான தேவாவின் தாயார் கிருஷ்ணவேணி உடல்நலக்குறைவு காரணமாக 4-ந் தேதி (நேற்று) காலை இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
தாயாரை இழந்து வாடும் தேவாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்," என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











