Janhvi Kapoor: ஜான்வி கபூரை கவர்ச்சி நடனம் ஆடச் சொல்லும் தேவி ஸ்ரீ பிரசாத்.. ஆசையா வேற இருக்காம்!
ஹைதராபாத்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகி பெரும் வெற்றிப் படமாக மாறிய படம், புஷ்பா 2. மைத்ரீ மூவீஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கிய இந்தப் படம் வசூல் ரீதியாக பல சாதனைகளைப் படைத்து வருகின்றது. இப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் அடுத்த பாகம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பும் பூர்த்தி அடைந்துள்ளது. இப்படியான நிலையில் புஷ்பா படத்தின் மூன்றாவது பாகத்தில், நடிகை ஜான்வி கபூர் கவர்ச்சி நடனம் ஆடினால் சூப்பராக இருக்கும் என இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
புஷ்பா படத்தின் பல பிள்ஸ் பாய்ண்டுகளில் ஒன்று படத்தின் இசை. புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இந்தப் படத்தில் இடம் பெற்ற ஸ்ரீ வள்ளி பாடல் தேசிய விருது வென்றது. படத்தில் இடம் பெற்றிருந்த ஊ சொல்றியா மாமா பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது. இது மட்டும் இல்லாமல், இந்தப் பாடலுக்கு சமந்தா செம கிளாமராக நடனம் ஆடி ஸ்கோர் செய்திருந்தார்.

கவர்ச்சி நடனம்: புஷ்பா என்றாலே ஊ சொல்றியா பாடலும் சமந்தாவும்தான் பலருக்கும் நினைவுக்கு வந்தார்கள். இதனால் இரண்டாம் பாகத்தில் யார் வந்து ஒரு பாடலுக்கு ஆடினாலும் சரி, அவர்களை விட அதிக ஸ்கோர் செய்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் ராஷ்மிகா மந்தனா இருந்ததாக கூறப்படுகின்றது. அதற்கு ஏற்றதைப்போல், இரண்டாம் பாகத்தில் ராஷ்மிகா மந்தனா ஃபீலிங்ஸ் பாடலில் இதுவரை அவர் தெலுங்கு சினிமாவில் கையில் எடுக்காத அளவுக்கு செம கிளாமராக நடனம் ஆடினார். இவரது கிளாமர், படத்தில் கிளாமர் பாடலுக்கு நடனமாடிய ஸ்ரீ லீலாவை விடவும் கூடுதலாக இருந்ததால், ஸ்ரீ லீலாவில் கவர்ச்சி எடுபடவில்லை.

தேவி ஸ்ரீ பிரசாத்: இதற்கிடையில் புஷ்பா படத்தின் பாடல்கள் பின்னணி இசை என அனைத்திற்கும் இசை அமைத்த தேவி ஸ்ரீ பிரசாத், புஷ்பா 2 படத்தின் பின்னணி இசையை இசையமைப்பதில் இருந்து விலக்கப்பட்டார். இதற்கு காரணம் தயாரிப்பாளருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கும் இடையே சில பிரச்னைகள் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இப்படியான நிலையில் புஷ்பா படத்தின் பின்னணி இசை அமைப்பதில் இருந்து மட்டும் இல்லாமல், மைத்ரி மூவீஸ் தயாரித்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கு இசை அமைப்பதில் இருந்தும் தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டுள்ளார்.

ஜான்வி கபூர்: இப்படியான நிலையில், புஷ்பா 3 படத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தேவி ஸ்ரீபிரசாத்திடம், புஷ்பா 3 படத்தில் கிளாமர் டேன்ஸை யார் ஆடினால் நன்றாக இருக்கும் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர், ஜான்வி கபூர் ஆடினால் சூப்பராக இருக்கும் எனக் கூறியுள்ளார். இவரது இந்த பதில் பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தாலும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றுள்ளது. மேலும் அவர், தனக்கு சாய் பல்லவியின் நடனம் மிகவும் பிடிக்கும் என்றும் அவரது நடனத்திற்கு இசை அமைக்க ஆவலுடன் இருக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











