இளையராஜா vs வைரமுத்து பிரச்சனை.. சோனியா அகர்வால் நிகழ்ச்சியில் பளிச்சென பதில் சொன்ன இசையமைப்பாளர்!
சென்னை: சோனியா அகர்வால் நடித்துள்ள பேய் காதல் ஆல்பம் பாடல் விரைவில் வெளியாக உள்ளது. அதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது சோனியா அகர்வாலின் பேய் காதல் ஆல்பம் வீடியோ பாடலுக்கு இசையமைத்து நடித்துள்ள இசையமைப்பாளர் தரணிடம் இளையராஜா மற்றும் வைரமுத்து பிரச்சனை தொடர்பான கேள்வி எழுப்பப்பட அதற்கு அவர் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
ஒரு நல்ல பாட்டுக்கு இசை முக்கியமா அல்லது பாடல் வரிகள் முக்கியமா? என்கிற சர்ச்சை சமீப காலமாக பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சினிமா பிரபலங்கள் மற்றும் இசையமைப்பாளர் என பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

நல்ல பாடல் வரிகளும், இசையும் கலந்தால்தான் நல்ல பாடல் உருவாகும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ள நிலையில் இசையமைப்பாளர் தரண் வெளிப்படையாக தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
இளையராஜா வைரமுத்து பிரச்சனை: இசையமைப்பாளர் இளையராஜா இசை இல்லாமல் எந்த ஒரு பாடலும் உருவாகாது என்றும் தான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் தனக்கு மட்டுமே சொந்தம் என காப்புரிமை பெற்றுள்ள நிலையில், தன்னைக் கேட்காமல் தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் யாராவது தனது பாடல்களை பயன்படுத்தினால் வழக்கு தொடர்ந்து வருகிறார் இளையராஜா. இந்நிலையில் மொழியும் இசையும் கலந்ததுதான் பாடல் இதை அறிந்தவன் ஞானி அறியாதவன் அஞ்ஞானி என சமீபத்தில் நடந்த படிக்காத பக்கங்கள் படத்தின் வீட்டு விழாவில் வைரமுத்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கூலி படத்துக்கு எதிராக நோட்டீஸ்: மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள கூலி படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் சமீபத்தில் வெளியானது. அதில், இளையராஜாவின் பாடலை அனிருத் பயன்படுத்திய நிலையில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக நோட்டீஸ் சொல்ற இளையராஜா அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் அது தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளருக்கு இடையே நடக்கும் பிரச்சனை என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
சோனியா அகர்வாலின் பேய் காதல்: நடிகை சோனியா அகர்வால் பல படங்களிலும் ஆல்பம் பாடல்களின் தற்போது நடித்து வருகிறார். வனிதா விஜயகுமாருடன் இணைந்து தண்டுபாளையம் எனும் படத்தில் நடித்துள்ள அவர், 7ஜி எனும் பேய் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், பேய் காதல் எனும் ஆல்பம் பாடலில் நடித்துள்ள அவர் அது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்றார்.

இசையமைப்பாளர் தரண் குமார்: 2006 ஆம் ஆண்டு வெளியான பாரிஜாதம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தரண் குமார். சிவி, லாடம், சித்து + 2, தம்பிக்கு இந்த ஊரு, போடா போடி, சமர், இங்க என்ன சொல்லுது, பப்பி, இரண்டாம் குத்து, அருவா சண்டை மற்றும் நித்தம் ஒரு வானம் போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ள தரண் பேய் காதல் ஆல்பம் பாடலுக்கு இசையமைத்து நடித்துள்ளார்.
வரிகள் முக்கியமா? இசை முக்கியமா?: பேய் காதல் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தரண் குமாரிடம் இசை பெரியதா? பாடல் வரிகள் பெரியதா? ஒரு பாடலுக்கு எது முக்கியம் எனக் கேட்டதும், தன்னை பொறுத்தவரையில் முதலில் லிரிக்ஸ் தான் முக்கியம். அதன் பின்னர், நல்ல இசை அந்த பாடலை வெற்றிப் பாடலாக மாற்றும் என்றும் இசையமைப்பதே பாடல் வரிகளுடன் சேர்ந்து பாடலை உருவாக்குவதற்குத்தான் எனக் கூறியுள்ளார். இரண்டுமே முக்கியம் என்பது தான் என்னுடைய கருத்து என சேஃப் கோல் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











