Music director Dhina: தூங்க விடாமல் செய்த கங்கை அமரன்.. இசையமைப்பாளர் தினா வேதனை!

சென்னை: இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடந்துள்ள நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக தலைவராக இருந்த இசையமைப்பாளர் தினா, சபேசன் என்பவரிடம் தோல்வியடைந்துள்ளார். முன்னதாக இந்த தேர்தலையொட்டி பல களேபரங்கள் நடந்தன. தினாவை இந்த பதவியில் இருந்து விலகுமாறு இசையமைப்பாளர் இளையராஜா கோரியிருந்தார். மேலும் இவரது பதவியையொட்டி சங்க உறுப்பினர்கள் சில நீதிமன்றத்தை நாடியதும் இந்த சங்க தேர்தலை கவனத்திற்குள்ளாக்கியது. இதனிடையே இசையமைப்பாளர் கங்கை அமரனும் தினா குறித்த பல குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

இதனிடையே கங்கை அமரன் தன்மீது அடுக்கியுள்ள புகார்கள் அனைத்தும் ஆதாரமில்லாதவை என்று தினா தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் தன்மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை கூறியதை கேட்டு தான் இரு தினங்கள் தூங்காமல் தவித்ததாகவும் கூறியுள்ளார். தன்னுடைய பதவிக்காலத்தில் தான் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் உறுப்பினர்களுக்கு செய்ததாகவும் இதை தொடரவே தான் மீண்டும் சங்கத் தேர்தலில் போட்டியிட்டதாகவும் இது பிடிக்காத சிலர், தன்மீது தொடர் குற்றச்சாட்டுக்களை கூறி வருவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Music director Dhina express unhappy about the wordings of Gangai amaran

இசையமைப்பாளர் தினா: திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் இருமுறை தலைவராக இருந்த இசையமைப்பாளர் தினா மீண்டும் போட்டியிட்டார். ஆனால் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சபேசனிடம் அவர் தோல்வியடைந்துள்ளார். திரைத்துறையில் முதல் முதலாக துவங்கப்பட்ட இந்த சங்கத்தில் அவர் இருமுறை தலைவராக இருந்துள்ள நிலையில் அவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். முன்னதாக இசையமைப்பாளர் இளையராஜா, தினாவை இந்த பதவியில் இருந்து விலகுமாறு கேட்டிருந்தார். மேலும் அவரது தலைவர் பதவி குறித்து சில சங்க உறுப்பினர்களும் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.

கங்கை அமரன் குற்றச்சாட்டு: இதனிடையே தினா குறித்து இசையமைப்பாளர் கங்கை அமரனும் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்தார். கொரோனா காலத்தில் நலிவடைந்த இசைக்கலைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் 80 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் பவதாரிணியின் கையெழுத்தை அவருக்கே தெரியாமல் பயன்படுத்தியுள்ளதாகவும் கங்கை அமரன் குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருந்தார். தினா இளையராஜா, ஏஆர் ரஹ்மான் உள்ளிட்ட யாரையும் மதிக்க மாட்டார். என்றும் ரஹ்மானின் அப்பா புகைப்படத்தை தூக்கி வெளியில் போட்டதாகவும் அவர் மேலும் கூறியிருந்தார்.

தினா விளக்கம்: இதனிடையே இந்த குற்றச்சாட்டுக்களை தினா மறுத்துள்ளார். கங்கை அமரனின் அடுத்தடுத்த குற்றச்சாட்டுக்களால் தான் இரண்டு நாட்கள் தூங்காமல் தவித்ததாகவும் கூறியுள்ளார். இந்த தேர்தலில் ஒருவர் இரு முறைக்கு மேல் போட்டியிடக்கூடாது என்பது சட்டத்தில் இல்லை என்றும் முன்னதாக சிலர் 10 ஆண்டுகள் வரையிலும் தலைவராக இருந்துள்ளதாகவும் அதனால்தான் தான் மீண்டும் போட்டியிட்டதாக தினா கூறியுள்ளார். கங்கை அமரன் கூறியதை போல தான் யாரையும் தரக்குறைவாக பேசவில்லை என்றும் அவர் விளக்கம் தெரிவித்துள்ளார்.

காயப்படுத்திய கங்கை அமரன்: தேர்தலுக்கு முந்தைய தினம் கங்கை அமரன் தன்னை பற்றி பேசிய வார்த்தைகள் தன்னை மிகவும் காயப்படுத்தியதாகவும் தான் இரு தினங்கள் தூங்காமல் தவித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா காலத்தில் சங்க நிதியை தான் மோசடி செய்ததாக கங்கை அமரன் தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். பொறுப்புக்கு வந்த அவர்கள் இதை கண்டுபிடியுங்கள் என்றும் தினா தெரிவித்துள்ளார். தான் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்துதான் இறங்கியுள்ளதாகவும் இசைக்கலைஞர்கள் அறக்கட்டளையின் தன்னை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்ட தினா, அடுத்த தேர்தலிலும் தான் நிச்சயம் போட்டியிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X