3 அவிச்ச முட்டை ரூ. 1672-ஆ.. ஸ்டார் ஹோட்டல்னாலும் ஒரு நியாயம் வேணாமா.. பிரபல இசையமைப்பாளர் அப்செட்!

பிரபல இசையமைப்பாளர் ஒருவர் 3 முட்டைகள் சாப்பிட்டதற்கு ரூ.1672 பணம் கட்டியிருக்கிறார்.

அஹமதாபாத்: பிரபல இசையமைப்பாளர் ஒருவர் 3 முட்டைகள் சாப்பிட்டதற்கு ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.1672 பணம் கட்டியிருக்கிறார்.

ரா ஒன், வார் உள்ளிட்ட பல இந்தி படங்களுக்கு இசை அமைத்தவர் சேகர் ராவ்ஜியானி. பிரபல இசையமைப்பாளர் விஷாலுடன் இணைந்து பல பாடல்களை சேகர் இசை அமைத்துள்ளார். எனவே இவர்களை விஷால்-சேகர் ஜோடி என்று தான் பாலிவுட்டில் அழைப்பார்கள்.

Music director feels for paying huge money for eggs

சேகர் ராவ்ஜியானி சமீபத்தில் குஜராத் மாநிலம் அஹமதாபாத்திற்கு சென்றிருந்தார். அங்குள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கியிருந்தார்.

நேற்று மாலை சிற்றுண்டியாக 3 முட்டைகளை ஆர்டர் செய்து சேகர் சாப்பிட்டார். சாப்பிட்டு முடித்து பில்லை பார்த்ததும் சேகருக்கு தலையே சுற்றிவிட்டது. வேறு வழியில்லாமல் அந்த பில்லை கட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.

ஆனால் மனசு கேட்காமல் தவித்த சேகர், அந்த பில்லை போட்டோ எடுத்து தனது டிவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். அதில், "3 அவித்த முட்டையின் விலை 1672 ரூபாயா??? என அவர் வேதனையாக தெரிவித்துள்ளார்.

சேகர் பதிவிட்டுள்ள பில்லில், 3 அவித்த முட்டைகளின் விலை 1350 என உள்ளது. சேவை கட்டணம் ரூ.67.50, மத்திய ஜிஎஸ்டி ரூ.127.58, மாநில ஜிஎஸ்டி ரூ.127.58. ஆக மொத்த 3 முட்டைகளின் விலை ரூ.1672.66 என அதில் உள்ளது.

சேகருக்கு மட்டுமல்ல அந்த விலையை கேட்டால், இந்த முட்டையை போட்ட கோழிக்கே கூட தலை சுற்றத்தான் செய்யும். போங்கப்பா நீங்களும் உங்க 5 ஸ்டார் ஓட்டலும்...

More from Filmibeat

Read more about: music director eggs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X