ரசிகர்களே தயாரா.. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் முதல் பாடல் ரெடி.. அப்டேட் கொடுத்த ஜி.வி!

சென்னை: நடிகர் தனுஷ் தனது சினிமா வாழ்க்கையில் ஒரு முழுமையான சினிமா கலைஞனாக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றார் என்றே கூறலாம். நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என பல அவராதங்களை எடுப்பது மட்டும் இல்லாமல் அதில் வெற்றிக் கொடி நாட்டி வருகின்றார். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ராயன் படம் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இந்தப் படம் தனுஷின் 50வது படம் ஆகும். இந்தப் படத்திற்கு முன்னர் தனுஷ் பவர் பாண்டி என்ற படத்தினை இயக்கினார். அந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இதையடுத்து இவர் இயக்கிய படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK)படம்தான். இந்தப் படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட்டுத்தான் தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தினை இயக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் மட்டும்தான் படம் குறித்த அப்டேட்களைத் தொடர்ந்து தந்தவண்ணம் உள்ளார். இந்நிலையில், அவர் தனது எக்ஸ் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

Dhanush NEEK G V Prakash Kumar

அதில், சீக்கிரமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் முதல் பாடலை விட்டுறலாமா? ஃபர்ஸ்ட் சிங்கிள் மிக்ஸிங் கோயிங் ஆன்... 2கே கிட்ஸ் மற்றும் ஜென் இசட் தலைமுறையினருக்கான ஆல்பம் தயார்” என பதிவிட்டுள்ளார். இது ஜி.வி. பிரகாஷ்குமார் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தனுஷ் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் பாடல்: ஜி.வி. பிரகாஷ் குமாரின் எக்ஸ் பதிவின் மூலம் படத்தின் முதல் பாடல் சில தினங்களில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது. குறிப்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகின்றது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் தகவலாக உள்ளது. ஏற்கனவே தனுஷ் ராயன் படத்தின் வெற்றியைக் கொண்டாடிகொண்டு இருக்கும் வேளையில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் முதல் பாடலை ரிலீஸ் செய்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கவுள்ளார் என்ற பேச்சுகள் இப்போதே கிளம்பிவிட்டது.

NEEK: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மேலும் இந்தப் படத்தில் விடாமுயற்சி படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் முதல் அறிவிப்பின்போது தனுஷ், இந்தப் படம் வழக்கமான காதல் கதை எனக் குறிப்பிட்டிருந்தார்.

ராயன்: தனுஷ் இந்தப் படத்தில் மிகவும் இளம் நட்சத்திரங்களைக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். அதேபோல் இதற்கு முன்னர் ரிலீஸ் ஆன ராயன் படத்தில், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா, வரலட்சுமி சரத்குமார், காளிதாஸ் வெங்கட், துஷாரா விஜயன், சந்தீப் கிஷான், அபர்ணா பாலமுரளி, சரவணன் உள்ளிட்ட மிகவும் ஜாம்பவான் பட்டளத்தைக் கொண்டு இயக்கியிருந்தார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இளம் நட்சத்திரங்களை வைத்து இயக்கியுள்ளாதால் இந்தப் படம் மிகவும் ஜாலியான ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என கூறப்படுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X