இளையராஜா ராயல்டி விவகாரம்… துட்டு வேணுமா வாங்கி பொழைக்கணுமா.. கங்கை அமரன் விளாசல்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. அந்த டீசரில் இளையராஜா இசையமைத்த படத்தின் பாடல் இடம் பெற்று இருந்ததால், இசை தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருப்பதாக சன் பிக்சர்க்ஸ் நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது சோஷியல் மீடியாவில் பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கும் நிலையில், கங்கை அமரனின் பழைய பேட்டி ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு கூலி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசரில், ரஜினி நடித்த தங்கமகன் படத்தில் இளையராஜா இசையமைத்த வாவா பக்கம் வா பாடலின் டிஸ்கோ இசை பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த பாடலின் அனைத்து விதமான உரிமையும் இளையராஜாவிடமே உள்ளது. எனவே அந்தப் பாடலை பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டும், இல்லையெனில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது என்று இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Music director Gangaiamaran old video trending on social media

இளையராஜா வைரமுத்து: ஏற்கனவே இளையராஜா வைரமுத்து விவகாரம் இணையத்தில் பூதாகரமாகி சர்ச்சை வெடித்துள்ளது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வந்த நிலையில், இளையராஜாவின் தம்பியும் இசையமைப்பாளருமான கங்கை அமரன், வைரமுத்துவை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். அதில், எங்களால் மேலே வந்தவர், வந்த இடத்தையே காலில் போட்டு மிதிப்பது போல பேசி இருக்கிறார். மனிதனுக்கு நன்றி வேண்டும். அவருடைய பாடலுக்கு அதிகமாக புகழ் வந்ததால் கர்வம் தலைக்கேறி விட்டது என்றார்.

அவ்வளவு தான்: மேலும், அவர அடக்கி வைக்க ஆள் இல்லாததால் துள்ளிக் கொண்டிருக்கிறார். வைரமுத்துவை வாழ வைத்தது இளையராஜா தான். இதனால் இளையராஜாவின் போட்டோவை வைத்து தினமும் வைரமுத்து வணங்க வேண்டும். இளையராஜா இல்லை என்றால் வைரமுத்துவின் பெயரே இருந்திருக்காது. இளையராஜாவிற்கு ஒரே ஒரு தம்பி நான் இருக்கிறேன் இனிமேல் அவரை பற்றி தேவையில்லாமல் பேசினால் அவ்வளவு தான் என்று கங்கை அமரன் மிரட்டும் விதத்தில் பேசி இருந்தார்.

கங்கை அமரனின் பழைய வீடியோ: புகழ் பெற்ற கவிஞர் வைரமுத்துவை கங்கை அமரன் மிரட்டும் வகையில் பேசியதை பலரும் கண்டித்த நிலையில், வைரமுத்துவின் தீவிர ரசிகர்கள், இளையராஜாவிற்கும் கங்கை அமரனுக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து இருந்த போது, காப்புரிமை விவகாரம் குறித்து செய்தியாளர் ஒரு கேள்வி கேட்ட போது, காப்புரிமை என்பது அவருக்கான சம்பாத்தியத்திற்கான விஷயம், அதில் அவருக்கு பணம் வரும். இவர் இப்படி சொல்வதால் லைட் மியூஸிக்காரர்கள் கச்சேரி இல்லாமல் தவிக்கிறார்கள். அவர்களிடம் துட்டு கேட்கிறீர்கள், அந்த துட்டை வாங்கித்தான் பொழைக்கணுமா? அவ்வளவு பஞ்சத்துலயா இருக்கீங்க.

துட்டு வேணுமா: நீங்க இசையமைத்த பாட்டுக்கு அதற்கான சம்பளத்தை வாங்கிக்கொண்டுதான் இசையமைத்தீர்கள், இது இப்போது மக்கள் சொத்தாகி விட்டது. அவனை பாட வேண்டாம் என்று சொல்வதற்கு நீ யார்… அப்படி உனக்கு துட்டு வேணுமா… அப்படி துட்டு வேண்டும் என்றால் நான் தரேன் துட்டு என்று கடுமையாக இளையராஜாவை திட்டி பேசி இருந்தார். கங்கை அமரனின் இந்த பழைய வீடியோ இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X