இஸ்லாத்தில் இருந்து மீண்டும் இந்துவாக மாறிவிட்டேன்... இசையமைப்பாளர் சொன்ன காரணம்!

சென்னை: தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளரான ஜிப்ரான் இஸ்லாம் மதத்தில் இருந்து மீண்டும் இந்துவாக மாறிவிட்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட ஜிப்ரா, 2011ஆம் ஆண்டு வெளியான வாகை சூட வா திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் விமல், இனியா,தம்பி ராமையா, பொன்வண்ணன், நம்பிராஜன், குமரவேல் என பலர் நடித்திருந்தனர். கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் சர சர சார காத்து வீசும் போது... பாடல் ஜிப்ரானுக்கும், பாடகி சின்மயிக்கும் விசிட்டிங் கார்டாக அமைந்தது என்று சொல்லலாம்.

Music director ghibran again converted to hindu

இசையமைப்பாளர் ஜிப்ரான்: தனது முதல் படத்திலேயே முத்திரையை பதித்த ஜிப்ரானுக்கு பாராட்டுகள் குவித்தது மட்டுமில்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து குட்டிப் புலி, நையாண்டி, திருமணம் எனும் நிக்கா, அமரகாவியம், உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம், அதே கண்கள், தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சன் என பல ஹிட் திரைப்படத்திற்கு இசையமைத்து தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார்.

மனதிற்கு நெருக்கமான படம்:அண்மையில் இவர் சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் தயாரித்து இருக்கும் குரங்கு பெடல் படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், இப்படம் குறித்து ஜிப்ரான் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், குரங்கு பெடல் திரைப்படம் என் மனதுக்கு நெருக்கமான படமாக இருந்தது. அதற்கு காரணம் இந்த படத்தில் இருந்து என் அப்பா பெயரையும் என்னுடைய பெயருடன் சேர்த்து இருக்கிறேன், என் அப்பா பெயர் கணேஷ் பாலாஜி வைபோதா என்றார்.

மீண்டும் இந்துவாக மாறிவிட்டேன்: நான் சில ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றிக் கொண்டிருந்தேன். ஆனால், கடைசி மூன்று, நான்கு வருடங்களாக நான் மீண்டும் இந்துவாகவே மாறிவிட்டேன். சட்டபூர்வமாகவும் எல்லா மாற்றங்களும் செய்து விட்டேன். இதுவரை என்னுடைய படங்களில் ஜிப்ரான் என்ற பெயரை பயன்படுத்தி வந்தேன். ஆனால், குரங்கு பெடல் படத்தில் ஜிப்ரான் வைபோதா என்று என்னுடைய புது பெயரை போட்டு இருக்கிறேன் என்று கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

குரங்கு பெடல்: மதுபானக் கடை மற்றும் வட்டம் ஆகிய படங்களை இயக்கிய கமல்கண்ணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில், காளி வெங்கட் லீட் கேரக்டரில் நடித்துள்ளார். மேலும், சந்தோஷ் வேல்முருகன், பிரசன்னா பாலச்சந்தர் உட்பட பல நடிகர்கள் இருக்கிறார்கள். குழந்தைகளை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்த திரைப்படத்தின் கதை என்று பார்த்தால் மிக மிக சாதாரணமான ஒரு களம்தான். எந்தவித சுற்றிவளைத்தல்களோ, ஏற்ற இறக்கங்களோ இல்லாத திரைக்கதை.

ஆனால் சின்ன சின்ன நகைச்சுவை வசனங்கள், படம் முழுக்க நம் சிறுவயது அனுபவங்களை அசைபோட வைக்கும் நாஸ்டால்ஜியா அம்சங்கள் ஆகியவற்றின் மூலம் தன்னுடைய நோக்கத்தில் ஓரளவு வெற்றிபெறுகிறார் இயக்குனர் கமலக்கண்ணன். ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள்' சிறுகதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. காளி வெங்கட் தனது கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார்.

More from Filmibeat

Read more about: interview பேட்டி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X