twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தோல்வி தான் என்னை வேறு ஒரு மனிதனாக மாற்றியது.. ஜிப்ரானுக்கும் இதுதான் சீக்ரெட் மந்த்ரா!

    By Staff
    |

    சென்னை: ஜிப்ரான் பெரிய படமானாலும் சரி சிறிய படமானாலும் சரி தன் இசை நிச்சயம் மக்கள் மனதில் நிற்கும் என்று நினைத்து உழைக்கும் ஒரு இளம் இசை அமைப்பாளர்.

    2011 ஆம் ஆண்டு வாகை சூட வா படம் மூலமாக அறிமுகமானார் ஜிப்ரான். முதல் படத்திலேயே முத்திரை பதித்தது இவரின் இசை. இப்படத்திற்காக ஜந்து விருதுகளை பெற்றார் ஜிப்ரான். ஒரு கலைஞன் ஒரு படத்திலேயே சூரியன் போல வந்தாலும் மெல்ல மெல்ல தான் வெளிச்சம் வரும் அது போல தான் ஜிப்ரானும்.

    Music Director Ghibran Explains how Failures makes him has a different person

    இதன் பின் பல படங்களுக்கு இசை அமைத்த ஜிப்ரான், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான கமல்ஹாசனின் மூன்று திரைப்படங்களுக்கு வரிசையாக இசை அமைத்தார். அதில் உத்தம வில்லன் திரைப்படத்திற்காக பல்வேறு நாடுகளில் நடந்த திரைப்பட விழாக்களில் பல விருதுகளை குவித்தார் ஜிப்ரான்.

    கமல்ஹாசன் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் ஜிப்ரான். தொடர்ந்து பல தெலுங்கு படங்களுக்கும் இசை அமைத்தார் ஜிப்ரான். தனது பின்னணி இசையால் பலரையும் ஆச்சரியமடைய வைத்தார்
    தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வரும் பின்னணி இசை இன்று வரை அவரை நினைவில் வைக்கிறது.

    இதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படத்திற்காக சிறந்த இசை மற்றும் சிறந்த பின்னணி இசைக்கான விருதை பல திரைப்பட விழாக்களில் பெற்றார் ஜிப்ரான்.

    இந்நிலையில், தற்போது அளித்த ஒரு பேட்டியில் தோல்வி தான் தன்னை ஏதாவது வித்தியாசமாக செய்யத் தூண்டுகிறது. தோல்வி தான் என்னை வேறு ஒரு மனிதனாக மாற்றி வருகிறது என்று கூறியுள்ளார்.

    English summary
    A Much needed Music Director in Tamil cinema explaining about his hits and failures and the awards which he baggs and the Failure only made him as a different person.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X