Legend Saravanan: லெஜெண்ட் சரவணனின் அடுத்தப்படம்.. மியூசிக் யாரு தெரியுமா.. இதோ அப்டேட்!
சென்னை: பிரபல தொழிலதிபரும் நடிகருமான லெஜெண்ட் சரவணன் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியானது தி லெஜெண்ட் படம். ஜேடி -ஜெர்ரி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப்படமாக மாறியது. ஹாரீஸ் ஜெயராஜ் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தியில் முன்னணி நடிகையான ஊர்வசி ரவுத்தேலா, விவேக் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தான் நடிக்கவுள்ளதாக சரவணன் அறிவித்திருந்தார். இந்நிலையில் அவரது அடுத்தப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, தனுஷின் கொடி, பட்டாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள துரை செந்தில்குமார் இயக்கத்தில் அடுத்ததாக லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடிக்கவுள்ளார். முதல் படத்தை தொடர்ந்து தன்னுடைய கெட்டப்பை மாற்றிக் கொண்டுள்ளார் சரவணன். அந்தவகையில் துரை செந்தில்குமார் சொல்லிய கதை அவருக்கு பிடித்துப்போக அடுத்ததாக இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

லெஜெண்ட் சரவணன்: பிரபல ஜவுளிக்கடை உரிமையாளரான லெஜெண்ட் சரவணன் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியானது தி லெஜெண்ட் படம். பிரபல இயக்குநர்கள் ஜேடி -ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப்படமாக ஆனது. பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான இந்தப் படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கவுள்ளதாக முன்னதாக தெரிவித்திருந்த சரவணன் தன்னுடைய அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அடுத்தப்பட அறிவிப்பு: சுதந்திர தினத்தை குழந்தைகளுடன் கொண்டாடிய லெஜெண்ட் சரவணன், நல்ல கதை கிடைத்துள்ளதாகவும் விரைவில் படத்தை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களின் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி, பட்டாஸ் போன்ற படங்களில் இயக்கியுள்ள துரை செந்தில்குமார் இயக்கத்தில் அடுத்ததாக லெஜெண்ட் சரவணன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சரவணனே தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் அடுத்ததாக இசையமைப்பாளர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தி லெஜெண்ட் படம்: தி லெஜெண்ட் படத்தில் பாடல் மற்றும் சண்டை காட்சிகளில் சரவணன் சரியாக செய்திருந்ததாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் படத்தில் இன்னும் சரியான நடிப்பை கொடுத்திருக்கலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. முதல் படத்திலேயே முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களுடன் களமிறங்கி கோலிவுட்டில் ஆச்சர்யத்தை உண்டு செய்தார் லெஜெண்ட் சரவணன். இந்தப் படமெல்லாம் எப்படி வரவேற்பை பெறும் என்ற விமர்சனத்தையும் தகர்த்தெறிந்து படத்தை வெற்றிப்படமாக்கினார். பான் இந்தியா படமாகவும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் இந்தப் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
லெஜெண்ட் சரவணனின் புதிய லுக்: முன்னதாக தன்னுடைய கடை விளம்பரங்களுக்காக தமன்னா, ஹன்சிகா உள்ளிட்டோருடன் நடித்து ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களை பெற்றவர் லெஜெண்ட் சரவணன். அவர் படத்தில் நடித்தபோது, அதிகமான விமர்சனங்களை சந்தித்த அவர் மீது ரசிகர்களுக்கு தற்போது நம்பிக்கை பிறந்துள்ளது. அதற்கேற்ப தற்போது அவரது லுக்கும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தற்போது சிறப்பான படங்களை கொடுத்த துரை செந்தில்குமார் இயக்கத்தில் இணையவுள்ளதாக கூறப்படும் நிலையில், அவரது அடுத்தப்படமும் மிகுந்த கவனத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஜிப்ரான் இசையும் சேர்ந்து மேஜிக்கை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











