»   »  கேன்ஸ் திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் ஜிப்ரானின் குறும்படம்!

கேன்ஸ் திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் ஜிப்ரானின் குறும்படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது பரப்பரப்பான இசை வேலைகளின் இடையே தனது நண்பன் ரத்திந்திரன் ஆர் பிரசாத்தின் குறும்படத்தை படத்துக்கு நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

‘ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்' (Swayers Corporations) என்ற இக்குறும்படம் பிரான்ஸ் நாட்டில் நடக்கும் கேன்ஸ் 2015 திரைப்பட விழாவுக்குத் தேர்வாகியுள்ளது. முழுக்க முழுக்க சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் படமாக்கப்பட்டுள்ள ‘ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்' குறும்படத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் பசாக் கேசிலர் பிரசாத் மற்றும் ஹக்கன் கண்டார்லி சார்பாக இசையமைப்பாளர் ஜிப்ரான் பொறுப்பேற்று தயாரித்துள்ளார்.

Music Director Ghibran’s Short film at Cannes film Festival 2015.

இதுகுறித்து ஜிப்ரான் கூறுகையில், "ரத்திந்திரன் எனது சிறு வயது நண்பர். நல்ல சினிமா பற்றிய தேடுதல் உடையவர். பல சர்வதேச திறைபடங்களில் பணியாற்றியுள்ளார். இவர் ஜெர்மனியில் இயக்கிய Frullings Erwachen என்ற படத் தொகுப்பு விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

சினிமாவில் சாதிக்கவேண்டும் என்று துடிப்புடன் இருப்பவர். இருவரும் பல வருடங்களுக்கு முன் குறும் படம் ஒன்றை தயாரித்த்துள்ளோம், அதுவும் சர்வதேச அளவில் பேசப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தயாரிப்பு வேலைகளில் இறங்கியது நல்ல அனுபவமாய் இருந்தது.

Music Director Ghibran’s Short film at Cannes film Festival 2015.

‘ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்' குறும்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வானது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தயாரிப்பாளர்கள் மற்று எனது நண்பன் ரத்திந்திரனுக்கு வாழ்த்துக்கள்," என்றார்.

படத்தை இயக்கிய ரத்திந்திரன் கூறுகையில், "ஒரு ரசாயன நிறுவன அதிகாரியை கொல்வதற்கு செல்லும் சுற்று சூழல் ஆர்வலரின் பயணம் தான் கதை. 30நிமிடம் ஓடக்கூடிய இந்த த்ரில்லர் கதையில் பாடலோ பின்னணி இசையோ கிடையாது. ஆனாலும் ஜிப்ரான் இப்படத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளராக எனக்கு பக்க பலமாய் இருந்தார். எனது ஒளிப்பதிவாளர் ஃபரூக் கே பாஷா மற்றும் ஜிப்ரான் ஆகியோருடன் பணிப்புரிந்தது மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது," என்றார்.

ஜிப்ரான் மற்றும் ரத்திந்திரன் R பிரசாத் இருவரும் பிரான்சில் மே 13 முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கும் ‘ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்' திரையிடலுக்கும் அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Popular music directror Ghibran has turned his tunes from music to production. The ‘Vaagai Sooda Vaa’ musician has executed the whole production works for the short film named ‘Swayer Corporations’ directed by his childhood friend Rathindran R Prasad for Turkish producers Basak Gaziler Prasad & Hakan Kantarli.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more