Actor Dhanush: DD3 பக்கா லவ் படம்.. தனுஷ் படம் குறித்து தகவல் சொன்ன ஜிவி பிரகாஷ்!

சென்னை: நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள டி50 படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் அடுத்தப்படத்தையும் இயக்கவுள்ளார் தனுஷ். தன்னுடைய அக்கா மகனை வைத்து இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

இதையடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் அவர் கமிட்டாகியுள்ள படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Music Director GV Prakash gives update about Dhanushs directorial DD3 movie

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ளது கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜனவரியில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் டி50 படத்தை இயக்கி முடித்துள்ளார் தனுஷ். சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். வடசென்னையை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது.

தனுஷ் இயக்கம்: இந்தப் படத்திற்கு ராயன் என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ளதாக தனுஷ், தன்னுடைய எக்ஸ் தளத்தில அறிவித்துள்ளார். ப பாண்டி படத்தை தொடர்ந்து டி50 படத்தை தன்னுடைய இயக்கத்தில் தற்போது தனுஷ் இயக்கி முடித்துள்ளார். இதனிடையே இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய DD3 படத்தை துவங்கியுள்ளார் தனுஷ்.

தனுஷின் DD3 படம்: தனுஷின் இயக்கத்தில் உருவாகவுள்ள DD3 படத்தில் அவரது அக்கா மகன் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்திலும் ஜிவி பிரகாஷ்குமார்தான் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் மூன்று பாடல்களை தான் கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும் இந்தப் படத்தில் தனுஷ் நடிப்பாரா என்பது குறித்து தனக்கு தெரியாது என்றும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன படம் போல இந்தப் படமும் காதல் சப்ஜெக்ட்டில் அனைத்து ரசிகர்களையும் ஈர்க்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

DD3 படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ்: மயக்கம் என்ன படத்தை போலவே இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவரும் என்றும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். தனுஷின் இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டே அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கும் படத்தின் சூட்டிங்கில் தனுஷ் இணையவுள்ளார். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் அடுத்தடுத்த படங்கள்: இந்தப் படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் படத்திலும் தனுஷ் நடிக்கவுள்ளார். அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக கமிட்டாகியுள்ள தனுஷ், அடுத்தடுத்து இரு படங்களின் இயக்கத்திலும் கவனம் செலுத்தி அதில் ஒரு படத்தின் சூட்டிங்கையும் நிறைவு செய்துள்ளார். தொடர்ந்து அடுத்த படத்தின் சூட்டிங்கையும் துவங்கியுள்ளார். அவரது கேப்டன் மில்லர் படத்தையும் ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப நிறைவு செய்துள்ளார் தனுஷ். இந்தப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் ஜனவரியில் வெளியாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X