என்னைவிட தனுஷ் அந்த விஷயத்தில் சூப்பர்.. 3 படங்களில் சேர்ந்து வொர்க் பண்றோம்.. ஜிவி பிரகாஷ் ஓபன்!
சென்னை: கோலிவுட்டில் நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் கூட்டணி மிகவும் சிறப்பானது. இவர்கள் இருவரும் இணைந்து பொல்லாதவன், மயக்கம் என்ன, அசுரன் உள்ளிட்ட படங்களில் மாஸ் காட்டியுள்ளனர். குறிப்பாக செல்வராகவன் இயக்கத்தில் வெளியான மயக்கம் என்ன படம் இருவருக்குமே நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.
இதனிடையே, சினிமாவை தாண்டி இருவரும் மிகச் சிறப்பான நட்புடன் பழகி வந்ததாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ் மிகக் கடினமான உழைப்பாளி என்றும் ஒரு நாளில் 17 மணி நேரம் கூட அவர் உழைப்பார் என்றும் ஜி.வி பிரகாஷ் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் காம்பினேஷன் கோலிவுட்டில் மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்தால் அந்தப்படம் வெற்றிதான் என்று கூறும் வகையில் இவர்களின் கூட்டணி மிக சிறப்பாக அமைந்து வருகிறது. பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன் என தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஹிட் படங்களை இவர்கள் இருவரும் இணைந்து கொடுத்துள்ளனர். இந்தப் படங்களின் பாடல்கள் மிகச்சிறப்பாக அமைந்து ரசிகர்களின் எவர்கிரீன் ஃபேவரைட்டாக அமைந்துள்ளன.
சினிமாவை கடந்தும் இவர்கள் இருவரும் மிகச் சிறப்பான நட்புடன் இருந்ததை பார்க்க முடிந்தது. ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை போட்டு ஆறு வருடங்கள் பேசாமல் இருந்ததாக ஜிவி பிரகாஷ் தனது பேட்டியொன்றில் தெரிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தார். சினிமாவை கடந்த சறப்பான நட்பு இருந்த நிலையில் தனக்கும் அவருக்கும் சண்டை வந்ததாகவும் தற்போது அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விட்டதாகவும் பழையபடி தாங்கள் மீண்டும் நல்ல நண்பர்களாக மாறியுள்ளதாகவும் ஜிவி பரகாஷ் கூறயுள்ளார்.
கடந்த ஆண்டில் தனுசுடன் இணைந்து கேப்டன் மில்லர் படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் பீரியட் படமாக அமைந்த நிலையில் அதற்கு ஏற்ப சிறப்பான இசையை கொடுத்திருந்தார் ஜிவி பிரகாஷ். இந்நிலையில் அவர் தற்போது கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் தானும் தனுஷும் ஒவ்வொரு முறை படங்களில் இணையும் போது அதன் அவுட்புட் மிகப்பெரியதாக இருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். தான் மிகப்பெரிய கடின உழைப்பாளி என்று நினைப்பேன் என்றும் ஆனால் தன்னைவிட கடின உழைப்பாளி தனுஷ் என்றும் ஜிவி பிரகாஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இரண்டு பேருமே ஒரு நாளில் 17 மணி நேரம் கூட உழைப்பதாகவும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுவரை தனுசுடன் இணைந்து 10 படங்கள் செய்துள்ளதாகவும் மேலும் அடுத்தடுத்து மூன்று படங்களில் இணைந்துள்ளதாகவும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். தனுசுக்கும் தனக்கும் நல்ல புரிதலும் அன்பும் இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை படங்களில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











