GV Prakash: ஜப்பான் படம் எப்படி.. முதல் விமர்சனத்தை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்!

சென்னை: நடிகர் கார்த்தி தன்னுடைய கதைகளை சிறப்பாக தேர்ந்தெடுத்து அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.

கடந்த ஆண்டில் இவரது பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் ஆகிய படங்கள் வெளியாகி மூன்று படங்களும் சூப்பர் ஹிட்டடித்தன.

Music director GV Prakash hails and comments about Actor Karthis Japan movie

இந்நிலையில் இந்த ஆண்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது பொன்னியின் செல்வன் 2 படம் வெளியானது.

கார்த்தியின் ஜப்பான் படத்தை விமர்சித்த ஜிவி பிரகாஷ்: நடிகர் கார்த்தி தன்னுடைய கேரியரை தமிழில் உதவி இயக்குநராகத்தான் துவக்கினார். மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், அமீர் இயக்கத்தில் வெளியான பருத்தி வீரன் படத்தில் நடிகராக அறிமுகமானார். கார்த்தியின் முதல் படமே வெற்றிப்படமாக அமைந்த நிலையில், இந்தப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த சிறப்பான இயக்குநர்களின் படங்களில் நடித்து தன்னை வெற்றி நாயகனாக மாற்றியுள்ளார். கடந்த ஆண்டில் மட்டுமே கார்த்தியின் 3 படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ளன.

கடந்த ஆண்டில் விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் படங்கள் கார்த்தியின் நடிப்பில் வெளியான நிலையில், மூன்று படங்களிலும் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதில் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் கார்த்திக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. படத்தில் வந்தியத் தேவன் கேரக்டரில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மற்ற இரு படங்களும் சூப்பர் ஹிட்டடித்து கார்த்தியின் கேரியர் பெஸ்ட் படங்களாக அமைந்துள்ளன.

இந்நிலையில் இந்த ஆண்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் 2 படமும் வெற்றிப்படமாக அமைந்த நிலையில் தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. இந்தப் படத்தின் போஸ்டர்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பாக அமைந்த நிலையில் விரைவில் இசை வெளியீடு நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் தீபாவளி ரிலீசாக திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

கார்த்தியின் 25வது படமாக உருவாகியுள்ள ஜப்பான் படத்தை ராஜூ முருகன் இயக்கியுள்ள நிலையில், படம் கார்த்தி மற்றும் ராஜூ முருகன் இருவரின் ஸ்டைலில் கலவையாக இருக்கும் என்று படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ராஜூ முருகனின் முந்தைய படமான குக்கூ போலவே இந்தப் படத்திலும் சிறப்பான இரண்டு பாடல்கள் அமைந்துள்ளதாகவும் ஜிவி பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் கார்த்தியின் ஜப்பான் கேரக்டருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும் படத்தில் பாடல்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

திருச்சியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஜப்பான் படம் உருவாகியுள்ளது. முன்னதாக கார்த்தியின் பிறந்தநாளையொட்டி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் படத்தில் ரசிகர்களை கவரும் பல விஷயங்கள் உள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. ஜிப்சி படத்திற்கு பிறகு ராஜூ முருகன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X