Don't Miss!
- News
சொந்தமாக 140 கார்கள்.. கோடீஸ்வர அமைச்சர்.. பாதுகாப்பு அதிகாரியாலேயே பலி.. யார் இந்த நபா கிஷோர் தாஸ்?
- Sports
99 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. செம பதிலடி கொடுத்த இந்தியா.. கொத்தாக விழுந்த விக்கெட்டுகள்
- Finance
மீண்டும் இப்படி ஒரு பிரச்சனையா.. மாருதி சுசூகி கவலை.. இனி என்ன செய்ய போகிறதோ?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
என் வாழ்க்கையின் வழிகாட்டி சூர்யா சார் தான்.. மெய்சிலிர்க்கும் ஜிவி பிரகாஷ்!
தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவராக ஜி வி பிரகாஷ் காணப்படுகிறார்.
இசை அசுரனாக அறியப்படும் ஜிவி பிரகாஷ், அதிகமான படங்களில் நடித்து தன்னை சிறப்பான நடிகராகவும் நிலை நிறுத்தியுள்ளார்.
நடிப்பு, இசையமைப்பு என இரு வேறு தளங்களில் இவர் செயல்பட்டாலும் இரண்டிலுமே தன்னை நிரூபித்து வருகிறார்.
கேஜிஎஃப் பட பிரபலம் நடிகர் கிருஷ்ணா ஜி ராவ் காலமானார்... அதிர்ச்சியில் கன்னட திரையுலகம்!

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்
நடிகர், இசையமைப்பாளர் என இரு வேறு தளங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ஜி வி பிரகாஷ் இவர் இசையமைப்பில் பல படங்கள் சிறப்பான பாடல்களுடன் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன இவரை இசை அசுரன் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் .

தொடர்ந்து வெற்றிப் படங்கள்
முன்னணி நடிகர்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் ஜிவி பிரகாஷ் புதிய இயக்குனர்களின் வித்தியாசமான கதைக்களங்களுக்கும் கை கொடுத்து வருகிறார். குறிப்பாக கிராமத்து பின் புலங்களில் வெளியாகும் படங்கள், இவரது இசையால் உயிர் பெற்று வருகின்றன. இவ்வாறு அதிகமான வெற்றி படங்களை இவர் கொடுத்து வருகிறார்.

நடிகராக மாறிய ஜிவி பிரகாஷ்
ஆரம்பத்தில் ஜிங்கிள்ஸ் இசைகளில் பணியாற்றி வந்த ஜி வி பிரகாஷ் அதன் மூலம் படங்களில் இசை அமைக்கும் வாய்ப்பை பெற்றார். தொடர்ந்து தன்னுடைய சிறப்பான இசையால் தன்னை நிரூபித்து சிறப்பான இசையமைப்பாளராகவும் தற்போது மாறியுள்ளார். தொடர்ந்து சிறப்பான இசையை கொடுத்து வந்த ஜிவி பிரகாஷ் ஒரு கட்டத்தில் தன்னை நடிகராகவும் மாற்றிக் கொண்டு அதிகமான படங்களில் நடித்தார்.

சிறப்பான விமர்சனங்களை பெற்ற பேச்சிலர்
சமீபத்தில் இவரது நடிப்பில் ஜெயில், பேச்சிலர் போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. குறிப்பாக ஜெயபாரதியுடன் இவர் நடித்திருந்த பேச்சுலர் படம் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. இந்தப் படத்தில் லிவிங் டுகெதரை மையமாக வைத்து கதைகளம் உருவாக்கப்பட்டு இருந்தது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான கதைகளத்துடன் இந்த படம் ரசிகர்களை கொண்டாட வைத்தது.

சூர்யாவுடன் இணைந்த ஜிவி பிரகாஷ்
ஏறக்குறைய 70க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ள ஜிவி பிரகாஷ் தன்னுடைய 72வது படமாக சூர்யாவுடன் சூரரைப் போற்று படத்தில் இணைந்திருந்தார். இந்தப் படத்தில் இவருக்கு தேசிய விருது கிடைத்தது. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ஐந்து தேசிய விருதுகள் ஒவ்வொரு பிரிவுகளில் கிடைத்தது. சூர்யாவிற்கும் இந்த படத்திற்காக தேசிய விருது கிடைத்தது.

உத்வேகம் கொடுத்த சூர்யா
இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஜிவி பிரகாஷ், தான் ஆரம்பத்தில் ஜிங்கிள்ஸ் வாசித்த போது அதை கேட்டு சூர்யா தன்னை பாராட்டியதாகவும் படங்களில் பணியாற்றுமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இது தனக்கு உத்வேகமாக அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்து அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் இந்த கூட்டணி தனக்கு சிறப்பாக அமைந்ததாகவும் ஜி வி பிரகாஷ் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்