GV Prakash: விஜய்யுடன் வெற்றிமாறன், சுதா கொங்கரா கண்டிப்பாக இணைவாங்க.. ஜிவி பிரகாஷ் உறுதி!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் இணையவுள்ளார் விஜய். படத்திற்கு யுவன் இசையமைக்க கமிட்டாகியுள்ளார்.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த இயக்குநர்களுடன் விஜய் கமிட்டாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் கண்டிப்பாக வெற்றிமாறன், சுதா கொங்கராவுடன் இணைவார் என ஜிவி பிரகாஷ் உறுதி: நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக ரிலீசுக்கு லியோ படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு அக்டோபர் 5ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இசை வெளியீடு நடக்கும் இடம் குறித்த தகவல்கள் விரைவில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், தளபதி 68 படத்தில் இணையவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் லியோ படத்தின் ரிலீசை தொடர்ந்து பூஜையுடன் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. லியோ படத்தின் ரிலீசை தொடர்ந்தே இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று வெங்கட் பிரபு தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். லியோ படத்தின் ரிலீசுக்காகவும் இந்தப் படத்தின் அப்டேட்டிற்காகவும் சேர்த்தே விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
விஜய்யின் தளபதி 67, தளபதி 68 என அடுத்தடுத்த படங்கள் குறித்து தெரியவந்துள்ள நிலையில், அவர் அடுத்தடுத்து எந்தெந்த இயக்குநர்களுடன் இணைவார் என்று தெரிந்துக் கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அவர் அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி அவர் அடுத்தடுத்த திட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
முன்னதாக விஜய் வெற்றிமாறன் கூட்டணியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் விஜய் மட்டுமில்லாமல் வெற்றிமாறனும் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிசியாக உள்ளார். தற்போது விடுதலை 2 படத்தில் பிசியாக உள்ள வெற்றிமாறன், அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணையவுள்ளார். இந்தப் படத்திற்காகத்தான் தான் காத்திருப்பதாக சமீபத்தில் சூர்யாகூட தெரிவித்திருந்தார்.
இதனிடையே, முன்னதாக விஜய் -வெற்றிமாறன் கூட்டணி குறித்த தகவ்லகள் பரவின. வெற்றிமாறன்கூட தன்னுடைய பேட்டிகளில் இதுகுறித்து பேசியிருந்தார். இந்நிலையில் தற்போது இந்தக் கூட்டணி குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். விஜய் -வெற்றிமாறன் கூட்டணி குறித்து பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருவது குறித்து பேசியுள்ள ஜிவி பிரகாஷ், இவர்கள் இருவருக்கும் பொருத்தமான நேரம் வரவேண்டும் என்றும் இருவரும் பிசியாக இருப்பதால் சரியான நேரம் வரும்போது இந்தக் கூட்டணி கண்டிப்பாக அமையும் என்றும் கூறியுள்ளார்.
இதேபோல அடுத்ததாக சூர்யாவின் படத்தை இயக்கவுள்ள சுதா கொங்கராவும், விஜய்யுடன் இணைய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் விரைவில் இந்தக் கூட்டணியும் இணையும் என்றும் கூறியுள்ளார். ஜிவி பிரகாஷின் இந்தப் பேட்டி தற்போது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. விரைவில் வெற்றிமாறன் -விஜய் கூட்டணி இணையும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அதற்காக ரசிகர்கள் அதிகமான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











