மெலடி இசையால் ரசிகர்களை கட்டிப்போட்ட ஜி.வி.பிரகாஷ்.. இன்று பிறந்த நாள்..பிரபலங்கள் வாழ்த்து!

சென்னை : இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், ஜூன் 13ஆம் தேதியான இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு நண்பர்கள், ரசிகர்கள் திரைப் பிரபலங்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Recommended Video

Nattamai Teacher Raksha இன்றைய நிலை | SarathKumar, Vikram Gemini

தன்னுடைய ஒவ்வொரு படங்களின் இசையின் மூலம் மக்களை கட்டி இழுத்து வந்த ஜி வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் மட்டுமில்லாமல் நடிப்பிலும் நான்ஸ்டாப்பாக போய்க்கொண்டிருக்கிறார்.

வெயிலில் ஆரம்பித்த இவரின் இசைப்பயணம் தற்போது வரை அசுர வேகத்தில் வெறித்தனமாக போய் கொண்டிருக்கிறது.

முதல் பாடல்

முதல் பாடல்

ஜென்டில்மேன் படத்தில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே என தன்னுடைய திரைப்படத் துறை பயணத்திற்கு ஆறு வயதிலேயே பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தார் ஜிபி பிரகாஷ். இவர் இப்போது அசுர இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்து வருகிறார். தனது ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான இசையை மெட்டிசைத்து வரும் இவர் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் நெருங்கிய உறவினர் ஆவார்.

மக்களை கவர்ந்தார்

மக்களை கவர்ந்தார்

இசையமைப்பாளராக முதன் முதலாக வெயில் திரைப்படத்திற்கு இவர் இசையமைத்தார். இப்படத்தில் பாடல்கள் வெயிலோட விளையாடி, உருகுதே மருகுதே போன்ற பாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படப்பாடல்களும் மக்களிடைய பலத்த வரவேற்பை பெற்றது. இதையடுத்து, தமிழ் திரைத்துறையில் இளம் இசைப்புயலாக வலம் வருகிறார் ஜி.வி.

மூவரது கூட்டணி

மூவரது கூட்டணி

தனுஷ் மற்றும் வெற்றிமாறனுடன் இணையும் ஒவ்வொரு படங்களிலும் இவர் செய்து வரும் மாயாஜாலங்கள் எண்ணற்றவை. பல ஹீரோக்களுக்கும் பல இயக்குனர்களுக்கும் இவர் இசை அமைத்து இருந்தாலும் இந்தக் கூட்டணி என்றுமே தனி சிறப்பை பெற்று வருகிறது. பொல்லாதவன் படத்தில் ஆரம்பித்த இந்த மூவரது கூட்டணி இன்றுவரை வெற்றிக் கூட்டணியாக உலக அரங்கில் இன்றும் வெற்றிக் கொடியை நாட்டி வருகிறது. பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன் என தொடர்ந்து கொண்டு இருக்கும் இவர்களது பயணம் வாடிவாசலில் இப்பொழுது வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கிறது.

எதிர்மறையான விமர்சனங்கள்

எதிர்மறையான விமர்சனங்கள்

இசையில் பல சாதனைகளையும், பல விருதுகளையும் பெற்றுவரும் ஜிவி பிரகாஷ் குமார், நடிப்பு மற்றும் தயாரிப்பு பகுதிகளையும் விட்டு வைக்கவில்லை. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தலைவா படத்தில் நடிகர் விஜயுடன் வாங்கண்ணா வணக்கங்கண்ணா என்ற பாடலில் அவரது வருகை கொடுத்திருந்தார். பின் டார்லிங் என்ற படத்தின் மூலம் முழு கதாநாயகனாக உருவெடுத்த இவருக்கு திரைத்துறையில் இருந்து மட்டுமில்லாமல் பலரிடமும் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாது இசை மற்றும் நடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் இவர் இப்போது கையில் ஒரு டஜன் படங்களுடன் சில முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

செல்வராகவன்

செல்வராகவன்

வெற்றிமாறன் உடன் பயணிக்கும் படங்களில் இவரது கூட்டணி பேசப்பட்டது போன்று, இயக்குனர் செல்வராகவனுடன் இவர் இணையும் படங்களும் தனிச் சிறப்பை பெற்று வருகிறது. இவர் இசையமைத்த ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன போன்ற படங்கள் ஜிவி பிரகாஷ் குமார், செல்வராகவன் போன்றவர்களின் மற்றுமொரு வெற்றிக் கூட்டணி என்ற சிறப்பு அந்தஸ்தை பெற்று வருகின்றன.

காதல் திருமணம்

காதல் திருமணம்

இவர் இசையமைத்த படங்களான மதராசபட்டினம், ஆடுகளம், தெய்வத்திருமகள், அசுரன் போன்ற பல படங்களுக்கு சிறந்த இசையமைப்பாளர் என்ற பல விருதுகளை வாங்கி குவித்தார். இந்நிலையில் இவரின் படங்களில் பாடிவந்த பாடகி சைந்தவியை 2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். குடும்பம் குட்டி குழந்தைகள் என அழகான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் ஜிவி க்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இன்று பிறந்த நாள்

இன்று பிறந்த நாள்

உன்னால் எதுவும் சாதிக்க முடியாது என்று கூறியவர்களுக்கு, நடிப்பு, இசை, தயாரிப்பு என அனைத்திலும் சாதித்து, முடியாது என்று சொல்லியவர்களின் மூக்கை உடைத்து உயர்ந்துள்ளார் ஜிவி. பிரகாஷ் குமார். இன்று அவர் தன்னுடைய 33 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் பல திரைப்படத்துறை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X