தனுஷோட இட்லிகடை படத்தோட 40 நிமிட காட்சியை பார்த்தேன்.. அப்படி இருக்கு.. ஜிவி பிரகாஷ் சிலிர்ப்பு!

சென்னை: நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முக திறமையுடன் கோலிவுட்டியில் வலம் வந்து கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ் அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள், முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து இசையமைத்து வருகிறார். தன்னுடைய நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி வரும் கிங்ஸ்டன் படத்திலும் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

அடுத்தடுத்து இவரது இசையில் தீபாவளி ரிலீசாக அமரன், லக்கி பாஸ்கர் படங்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி மாஸ் காட்டி வருகின்றன. அடுத்ததாக தனுஷுடன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திற்கு இசையமைத்துள்ள ஜிவி பிரகாஷ் இட்லி கடை படத்தில் இசையமைப்பாளராக செயல்பட்டு வரும் அனுபவம் குறித்தும் பேசியுள்ளார்.

gv prakash itli kadai movie dhanush

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்: இசையமைப்பாளராகவே தன்னுடைய பயணத்தை கோலிவுட்டில் துவங்கினார் ஜிவி பிரகாஷ். வெப்பம் உள்ளிட்ட படங்கள் இவரது ஆரம்ப காலகட்டங்களிலேயே மிகச் சிறப்பாக அமைந்தன. மிகவும் சக்சஸ்ஃபுல் இசையமைப்பாளராக வலம்வந்த இவரை மாஸ் இசையமைப்பாளராக மாற்றிக் காட்டியது ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்கள்தான். கிராமத்து சப்ஜெக்டாக இருந்தாலும் சிட்டி சப்ஜெக்ட்டாக இருந்தாலும் தான் எந்த வகையிலும் சளைத்தவன் அல்ல என்பதை அடுத்தடுத்த படங்களில் நிரூபித்து வருகிறார் ஜிவி பிரகாஷ்.

அடுத்தடுத்த படங்கள்: இரு தினங்களுக்கு முன்னதாக தீபாவளி கொண்டாட்டமாக ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் என இரு படங்களும் மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளன. சமீபத்தில் தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷுடன் இட்லி கடை படத்திலும் இணைந்துள்ளார் ஜிவி பிரகாஷ். இந்த படம் கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ளதாகவும் முன்னதாக அசுரன், ஆடுகளம் போன்ற படங்களில் கிராமத்து சப்ஜெக்டில் தனுஷுடன் இணைந்து செயல்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனுஷ் குறித்து பாராட்டு: கிராமத்து கதைக்களத்தில் உணர்ச்சி பூர்வமான படங்களை கொடுப்பதில் தனுஷ் எப்போதும் சிறப்பானவர் என்றும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் 40 நிமிட காட்சிகளை தனுஷ் தனக்கு போட்டுக் காண்பித்துள்ளதாகவும் படம் சிறப்பாக வந்துள்ளதாகவும் ஜிவி பிரகாஷ் மேலும் கூறியுள்ளார். முன்னதாக தனுஷ் படங்களில் எமோஷன் மிகச்சிறப்பாக அமைந்து வருவதாகவும் இதை அவரது திருச்சிற்றம்பலம் படத்தில் பார்க்க முடியும் என்றும் கூறியுள்ள ஜிவி பிரகாஷ், அதை தற்போது இட்லி கடை படத்திலும் உணர முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இட்லி கடை படம்: இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளதாகவும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து செல்வராகவன், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் இயக்குனர்களுடன் ஜிவி பிரகாஷ் இணைந்து வருகிறார். இசை அசுரன் என்று கொண்டாடப்படும் அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களுக்கு மிக சிறப்பான அழகான அனுபவங்களை கொடுத்து வருகின்றன. இது மட்டும் இல்லாமல் நடிப்பிலும் தயாரிப்பிலும் அவர் அடுத்தடுத்த படங்களில் இணைந்து வருகிறார். அடுத்ததாக தன்னுடைய நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி வரும் கிங்ஸ்டன் படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X