பழங்குடியின மக்களின் வாழ்க்கையை இசையால சொல்ல முயற்சி செஞ்சிருக்கேன்.. ஜிவி பிரகாஷ் சிலிர்ப்பு!
சென்னை: நடிகர் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தங்கலான் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்றைய தினம் சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டுள்ளது.
தங்கலான் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு மிகப் பெரிய அளவில் தங்களது உற்சாகத்தை பதிவு செய்தனர். நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த வருடம் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மட்டுமில்லாமல் படக்குழுவினர் அனைவருக்கும் இந்த ஆண்டு கோல்டன் வருடமாக அமையும் என்று வாழ்த்துக்களை பகிர்ந்தார்.

நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம் -பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்ட பலரும் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மனைவி, இயக்குனர் ஏஎல் விஜய் உள்ளிட்டவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஜிவி பிரகாஷ் சிலிர்ப்பு: படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அவரது இசையில் படத்தின் அடுத்தடுத்த இரு பாடல்கள் வெளியாகி மாஸாகியுள்ளன. இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இசை அசுரன் ஜிவி பிரகாஷ், பல சுவாரசியங்களை சுருக்கமாக பகிர்ந்து கொண்டார். மிகப்பெரிய முயற்சியாக இந்தப் படத்தை படக்குழுவினர் உருவாக்கியுள்ளதாகவும் அவர்களின் முயற்சியில் தானும் ஒரு சிறிய பங்கு வகித்தது குறித்து மகிழ்ச்சி என்றும் அவர் கூறினார். இதனிடையே, படத்தில் பழங்குடியின மக்கள் வாழ்க்கையை இசையால் சொல்ல முயன்றுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
தங்கலான் கோல்டாக அமையும்: இந்தப் படத்தில் தன்னை இணைத்த பா ரஞ்சித், ஞானவேல்ராஜா மற்றும் விக்ரமிற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். அவர்கள் தனக்கு கொடுதத வாய்ப்பை தான் பெஸ்ட்டாக பயன்படுத்த முயன்றுள்ளதாகவும் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார். தெய்வத்திருமகள், தாண்டவம் படங்களை தொடர்ந்து இந்தப் படத்தில் விக்ரமுடன் தான் இணைந்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தப் படம் ஞானவேல் ராஜா உள்ளிட்ட படக்குழுவினருக்கு கோல்டாக அமையும் என்றும் அனைவரையும் டாப்பிற்கு கொண்டு செல்லும் என்றும் வாழ்த்து தெரிவித்தார்.
பாட்டு பாடிய ஜிவி பிரகாஷ்: மதராசபட்டினம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற ஒருசில படங்களே மிகவும் சிறப்பாக அமையும் என்றும் அவ்வாறு தனக்கு அமைந்துள்ள படம் தங்கலான் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். தொடர்ந்து தங்கலானே பாடலையும் மேடையில் பாடி அசத்தினார். இதனிடையே, அவருக்கு இந்த பாடல்களையும் படத்தின் பின்னணியையும் உருவாக்க துணையாக நின்ற பாடல் ஆசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையும் மேடைக்கு அழைத்து அவர் தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொண்ட நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அமைந்தது.


Click it and Unblock the Notifications











