மாஸ்க்கெல்லாம் மாஸாக.. அஜித்தின் குட் பேட் அக்லி படம் குறித்து ஜிவி பிரகாஷ் என்ன சொல்லியிருக்காரு?
சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். ரோட் டிராவலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன் ஆரவ் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகவுள்ளதாகவும் ஒருபுறம் தகவ்லகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி படம் குறித்து அஜித் குறித்தும் பல்வேறு சுவாரஸ்யங்களை பகிர்ந்து வருகிறார். நடிகர் அஜித் தன்னுடைய கார் ரேஸிங்கிற்காக தற்போது துபாயில் உள்ள நிலையில் அவர் அடுத்தடுத்து ட்ரெண்டிங்கில் உள்ளார். இதனிடையே அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதும் அதிகமானோர் கவனத்தை ஈர்த்து வருகிறது. வழக்கத்திற்கு மாறாக அதிகமான பேட்டிகளை கொடுத்து வருகிறார் அஜித்.
குட் பேட் அக்லி படம்: இதனிடையே அடுத்ததாக அஜித்தின் குட் பேட் அக்லி படமும் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரனின் ஃபேன் பாய் சம்பவமாக உருவாகிவரும் இந்தப் படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் முன்னதாக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக இணைந்த நிலையில், அவரது வேலை இயக்குநருக்கு திருப்தி அளிக்காத நிலையில் அவருக்கு பதிலாக இசையமைப்பாளர் ஜிவி பிரசாத் இணைந்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து தனது சமீபத்திய பேட்டியில் ஜிவி பிரகாஷ் பேசியுள்ளார்.
மாஸ்க்கெல்லாம் மாஸாக: இந்தப் படத்தில் தன்னுடைய 100 சதவிகித உழைப்பை கொடுக்க வேண்டும் என்று தான் நினைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து படத்தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ்தான் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக ட்வீட் மூலம் தான் குறிப்பிட்டதுபோலவே இந்தப் படத்தின் இசை மாஸ்க்கெல்லாம் மாஸாக அமைய வேண்டும் என்று தான் கருதுவதாகவும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். விஜய்க்கு தெறி படம் போலவும் தனுஷுக்கு அசுரன் படம் போலவும் இந்தப்படமும் அஜித்திற்கு சிறப்பாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜிவி பிரகாஷ் உற்சாகம்: முன்னதாக அஜித்துடன் ஜிவி பிரகாஷ் இணைந்து கிரீடம் படத்தை கொடுத்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் உணர்வுகளை மையமாக கொண்டு சிறப்பாக அமைந்திருந்தன. விழியில் உன் விழியில், கனவெல்லாம் பலிக்குதே, அக்கம் பக்கம் என அனைத்து பாடல்களும் கவனம் பெற்ற நிலையில், அதிரடி கதைக்களத்தில் உருவாகிவரும் குட் பேட் அக்லி படம் மிகச்சிறப்பாக அமையும் என்று ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அஜித்துடன் தான் மீண்டும் அமைத்துள்ள கூட்டணி குறித்து அவர் வெளிப்படுத்தியுள்ளார். குட் பேட் அக்லி படத்தில் அஜித் மூன்று வெவ்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ள நிலையில் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











